கம்பராமாயணம் 7355 · யுத்த 15.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பேர் அறிவாள - பேர் அறிவு உடையவனே; பெறுதியே யெவையும் சொல்லி - எல்லாவற்றையும் சொல்லால் பெறுவாய், சீரிற்று அறிதியே - நீ சிறந்த செயலை அறிந்துள்ளாய்; என்பால் வைத்த - என்னிடத்தில் கொண்ட; அன்பினுக்கு அவதி உண்டோ - அன்பினுக்கு ஓர் எல்லை உண்டோ; உறுதியே சொன்னாய் - எனக்கு உறுதி தரும் செயலையே சொன்னாய்; என்னா - என்று புகழ்ந்து; உள்ளமும் வேறுபட்டான் - மனம் மாறுபட்டவன் ஆனான் இராவணன்; இறுதியே இயைவது ஆனால் - ஒருவனுக்கு இறுதி வந்து நேரும்போது; இடை யொன்றால் தடை உண்டாமோ - இடையில் வேறு ஒன்றினால் தடை உண்டாகுமோ? (உண்டாகாது என்றவாறு).
முதற்போரில் தோல்வியுற்றதால் இராமலக்குவரது வன்மை உணர்ந்து மனம் மாறி மாலியவானிடம் பேசிய இராவணன் மகோதரனால் மீண்டும் பழைய அழிவு நிலைக்கே தள்ளப்பட்டான் என்பதை விளக்க 'இறுதி ஒருவனுக்கு வருவது என்று விதி இருக்குமானால் வேறொன்றால் அது தடைப்படாது; இறுதி வந்தே தீரும்' என்ற பொதுப்பொருளைப் பின்வைத்தமை யான் இது வேற்றுப் பொருள் வைப்பணி
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You win all things by your words, man of great wisdom! You know
- what is excellent; is there any limit to the love you bear me?
- You have spoken what is truly for my good,' he said, and his mind was changed again;
- when the end is bound to come, can anything in between stand in its way?
What the poem says
Irāvaṇaṉ praises Makōtaraṉ's advice and his devotion, and his mind swings back. After his defeat he had spoken humbly to Māliyavāṉ and seemed to recognise Irāmaṉ's power; now flattery pushes him back onto the road to ruin.
The poet closes with a general truth: when a man's end is fated, nothing can block it. Supporting a particular event with a general maxim in this way is a recognised figure of speech in Tamil poetics.