கம்பராமாயணம் 7354 · யுத்த 15.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய - தலைவனே; ஆங்கு அவன் தன்னைக் கூவி - அந்தக் கும்பகருணனை அழைத்து; ஏவுதி என்னின் - போர் செய்யக் கட்டளையிடுவாயாயின்; ஓங்கலே போல்வான் - மலை போன்ற அவனது; மேனி காணவே ஒளிப்பர் அன்றே - உடலின் தன்மையைக் காணவே அஞ்சி ஒளிந்து கொள்வார்களன்றோ? தாங்குவர் செரு முன் என்னில் - அவ்வாறு அஞ்சி ஒளிந்து கொள்ளாமல் எதிர் வந்து போர் செய்வர் எனில்; தாபதர் உயிரைத் - அந்தத் தவவேடம் கொண்ட இராம இலக்குவரது உயிரைத்; தானே வாங்கும் என்று - கும்பகருணனே போக்குவான் என்று; இனைய சொன்னான் - இத்தன்மையான வார்த்தைகளை மகோதரன் சொன்னான்; அவன் அது - அந்த இராவணன் அந்த சொல்லை; மனத்துக் கொண்டான் - மனத்திலே ஏற்றுக் கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If you summon him there and send him out, my lord,
- will they not hide the moment they see the body of that mountain of a man?
- And if they do stand against him in battle, he himself will take
- the lives of those ascetics' — so he spoke; and the king took it to heart.
What the poem says
Makōtaraṉ proposes his plan: wake Kumpakaruṇaṉ and send him to fight. The sight of his mountainous body alone will make the enemy hide, and if they dare face him he will kill the two 'ascetics'. Irāvaṇaṉ accepts the advice.