கம்பராமாயணம் 757 · பால 12.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறிஞ - யாவும் அறிந்தவனே, செய்வினையால் - (தாம்) செய்யும் தொழிலைக் கொண்டு; வித்தகமும் - தம் (வில் வன்மை முதலிய) திறமையும்; விதி வசமும் - ஊழ்வினையின் பயனும்; வேறுவேறு புறம் - வேறுவேறான இடத்திலே; கிடப்ப - பிரிந்து கிடந்த நிலையில்; அத் திருவை - (திருப்பாற் கடலிலிருந்து தோன்றிய) அத்திருமகளை, குல அமரர் - தேவர் கூட்டத்தார்; ஆதரித்தார் என - விரும்பியவாறே; இத் திருவை - (எமக்குக் கிடைத்து) இந்தச் சீதையை; நில வேந்தர் எல்லாரும் - நிலவுலகை ஆளும் அரசர் எல்லாரும்; காதலித்தார் - விரும்பினர்; இது ஒப்பது - இச்செய்தியை ஒப்பதாகிய; சித்திரம் - அதிசயம்; இங்கு - இவ் வுலகத்தில்; எங்கு உண்டு - எங்கே உள்ளது (எங்கும் இல்லை).
செய்வினையால் வித்தகம்: சிவதனுசை வளைத்து நாணேற்றி அம்பு எய்யக் கூடிய திறமை. “சிவ தனுசை வளைத்தவனுக்கே சீதை உரியவள்” என்ற விதி உள்ளது. தவிர இவளைப் பெறக்கூடிய இராமன் அவதரித்துள்ளான். இவ்வாறு இருக்கத் தம்மிடம் அவ்வகைத் திறமை சற்றுமில்லாத மற்றை நிலவேந்தர்கள் இச் சீதையை விரும்பினார்களே! இது என்ன அதிசயம்!
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Where here is there a wonder to match this? Though the skill the deed demanded
- and the favour of fate both lay far away from them,
- just as the host of gods once longed for that goddess of fortune, O wise one,
- so all the kings of the earth fell in love with this fortune of ours.'
What the poem says
Catāṉantaṉ, still addressing Vicuvāmittiraṉ, marvels at the folly of the suitors. Just as the gods all desired Ilakkumi when she rose from the sea, every king on earth desired Cītai.
Yet none had the skill the task required, the strength to bend Civaṉ's bow, nor did fate favour them: Cītai was destined for the one who could bend it, and that one, Irāmaṉ, had already been born. That such men should still want her is the wonder.