கம்பராமாயணம் 758 · பால 12.20

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"கலித் தானைக் கடலோடும் கைத் தானக் களிற்று அரசர்,
ஒலித்து ஆழி என வந்து மணம் மொழிந்தார்க்கு,' எதிர் உடுத்த
புலித் தானைக் களிற்று உரிவைப் போர்வையான் போர் வில்லை
வலித்தானே மங்கை திரு மணத்தான்' என்று, யாம் வலித்தேம்."

பொருள் · Meaning in Tamil

கை - துதிக்கையும், தானம் - மதநீரும் உடைய; களிறு அரசர் - யானைப்படை கொண்ட மன்னர்; கலித் தானைக் கடலோடும் - ஆரவாரமுடைய சேனையாகிய கடலோடு; ஆழி என ஒலித்து வந்து - கடல்போல முழக்கம் செய்து வந்து; மணம் மொழிந்தார்க்கு - மணத்தைக் குறித்து மகள் பேச அவர்களுக்கு; எதிர் - (எல்லாம்) எதிர்மொழியாக; உருத்த புலித்தானை - சினம் கொண்ட புலித்தோலை ஆடையாகவும்; களிறு உரிவைப் போர்வையான் - யானைத் தோலைப் போர்வையாகவும் கொண்டுள்ளவனாகிய சிவன்; வரிசிலையை - போரில் எடுத்த கட்டமைந்த வில்லை; வலித்தானே - தன் வலிமை கொண்டு வளைத்தவனே; மங்கை திருமணத்தான் - இந்தச் சீதையின் மணமகனாவதற்கு உரியவன்; என்று யாம் - என்று நாங்கள்; வலித்தேம் - உறுதியாகத் தெரிவித்தோம்.

முதல் வலித்தல்: வளைத்தல். இறுதியில் வரும் வலித்தல்: உறுதி கூறல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Kings with elephants of trunk and must, with their sea of clamouring armies,
  2. came roaring like the ocean to speak of marriage; and to them in answer we said:
  3. Whoever bends the banded bow of him who wears the angry tiger's skin and has the elephant's hide for a mantle,
  4. he alone shall be the maiden's bridegroom. This we firmly declared.'

What the poem says

Kings arrived with vast armies, thundering like the sea, to ask for Cītai's hand. Caṉakaṉ's court gave them one answer: only the man who could bend the bow of Civaṉ, the god clad in tiger skin with an elephant hide for his cloak, would marry her.

The verse plays on the verb valittal, used first for bending the bow and then for making a firm declaration.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"kalit tāṉaik kaṭalōṭum kait tāṉak kaḷiṟṟu aracar,
olittu āḻi eṉa vantu maṇam moḻintārkku,' etir urutta
pulit tāṉaik kaḷiṟṟu urivaip pōrvaiyāṉ vari cilaiyai
valittāṉē maṅkai tiru maṇattāṉ' eṉṟu, yām valittēm."