கம்பராமாயணம் 760 · பால 12.22

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இம் மன்னன் பெரும் சேனை, ஈவுதனை மேல் கொண்ட
செம்மன்னர் புகழ் வேட்ட பொருளே போல் தேய்ந்தது ஆல்,
பொம் என்ன வண்டு அலம்பும் புரிகுழலைக் காதலித்த
அம் மன்னர் சேனை, தமது ஆசை போல், ஆயிற்று, ஆல்.'

பொருள் · Meaning in Tamil

எம் மன்னன் - இந்தச் சனகனது; பெருஞ்சேனை - பெரிய படை; ஈவதனை மேற்கொண்ட - (இடைவிடாது புரிந்த போரினால்) கொடைத் தொழிலை மேற்கொண்டுள்ள; செம்மன்னர் - நீதியுள்ள அரசரின்; புகழ்வேட்ட - புகழையே விரும்பிய; பொருளே போல் - செல்வம் போல; தேய்ந்தது - வரவரக் குறையலாயிற்று; பொம்மென்ன - (ஆயினும்) 'பொம்' என்னும் ஒலியுண்டாக; வண்டு அலம்பும் - வண்டுகள் ஒலிக்கப் பெற்றதும்; புரிகுழலை - கடை குழன்றதுமான கூந்தலையுடைய சீதையை; காதலித்த - விரும்பிய; அம் மன்னர் சேனை - (பகை) அரசர்களின் சேனை; தமது ஆசை போல் - தமது ஆசை போல; ஆயிற்று - பெருகிற்று.

வேந்தர் பலர் கூடி இடைவிடாது செய்த போர்களாதலால் தனித்து நின்ற சனகனது படை சுருங்கியது. பகைவர் சேனைகள் பெருகின என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Our king's great army wasted away, like the wealth
  2. of righteous kings devoted to giving, who desire only fame;
  3. while the armies of those kings who longed for her of the curling tresses, where bees hum loud,
  4. grew as their desire grew.'

What the poem says

The war went badly for Caṉakaṉ. Standing alone against many allied kings, his army dwindled like the treasure of a generous king who gives everything away for the sake of fame.

The besieging armies, by contrast, kept swelling, as boundless as the kings' desire for Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'em maṉṉaṉ peruñ cēṉai, īvataṉai mēṟkoṇṭa
cem maṉṉar pukaḻ vēṭṭa poruḷēpōl tēyntatāl,
pommeṉṉa vaṇṭu alampum puri kuḻalaik kātalitta
am maṉṉar cēṉai, tamatu ācaipōl, āyiṟṟāl.'