கம்பராமாயணம் 7616 · யுத்த 15.303

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீசினன் கேடகம்; முகத்து வீங்கு கால்
கூசின குரங்கு வெங்குழுவைக் கொண்டு எழுந்து
ஆசைகள் தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும்
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால்.

பொருள் · Meaning in Tamil

வீசினன் - கும்பகருணன் வீசி எறிந்த; கேடகம் முகத்து வீங்குகால் - கேடயத்தின் முகத்தில் இருந்து மிகுதியாகத் தோன்றிய காற்றானது; கூசின குரங்கு வெங்குழுவைக் கொண்டு - அச்சம் கொண்ட குரங்குகளின் கொடிய கூட்டத்தைக் கொண்டு; எழுந்து ஆசைகள் தோறும் விட்டு எறிய - சென்று திக்குகள் தோறும் விட்டு எறிய; ஆர்த்து எழும் ஓசை ஒண்கடலையும் திடர் செய்தது - அக்குரங்குக் கூட்டங்கள் ஆர்த்து எழுகின்ற ஓசையைக் கொண்ட ஒள்ளிய கடலையும்; திடர் செய்து ஓடுமால் - மேடாகச் செய்த வண்ணம் ஓடிற்று என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He swung the shield; the swelling wind from its face
  2. lifted the cruel troop of cowering monkeys,
  3. flung them out to every quarter, and rushed on,
  4. making shoals even of the bright sea that rises roaring.

What the poem says

The gust from Kumpakaruṇaṉ's swinging shield catches up the frightened monkeys and hurls them in every direction. So many fall into the ocean that the roaring sea is filled up into mounds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīciṉaṉ kēṭakam; mukattu vīṅku kāl
kūciṉa kurakku veṅ kuḻuvaik koṇṭu eḻuntu
ācaikaḷtōṟum viṭṭu eṟiya ārttu eḻum
ōcai oṇ kaṭalaiyum tiṭar ceytu ōṭumāl.