கம்பராமாயணம் 7666 · யுத்த 15.353

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தீயினால் செய்த கண் உடையான்,நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்றுநாவினால் விசும்புற வளைத்து ஏந்தி,
பேயின் ஆர்ப்புடைப் பெருங்களம்இரிந்து எழ, பிலம் திரிந்தது போலும்
வாயினால் செல, வீசினன்;வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான்

பொருள் · Meaning in Tamil

தீயினால் செய்த கண்ணுடையான் - தீயினால் செய்யப்பட்டாற் போன்ற சினத்தால் சிவந்த கண்களை உடையவனான கும்பகருணன்; நெடுஞ் சிகையினால் திசை தீய - தன்னிடம் இருந்து எழும் நெடிய நெருப்பு அனலால் திசைகள் எல்லாம் கருக; வேயினால் திணி வெற்பு ஒன்று - மூங்கில்களால் நெருங்கிய மலை ஒன்றினை; நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி - நாவினால் வானத்தைப் பொருந்த வளைத்து எடுத்து; பேயின் ஆர்ப்புடை பெருங்களம் எரிந்து எழ - பேய்களின் பேரொலி கொண்ட பெரிய போர்க்களம் எரிந்து விழுமாறு; பிலம் திறந்தது போலும் வாயினால் - குகை திறந்தது போல் உள்ள வாயினால்; செல வீசினான் - பெருந்தொலைவு வீசி எறிந்தான்; வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான் - அதுகண்ட வள்ளலாம் இராமனும் தாமரை மலர் போன்ற கை வியப்பால் அசையப் பெற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose eyes seemed made of fire, as the quarters were scorched by his long flames,
  2. curled up with his tongue a mountain dense with bamboo, raising it to the sky,
  3. and, as the great field loud with ghouls caught fire, from his mouth like an opened cavern
  4. hurled it far; and the generous one's lotus hand quivered.

What the poem says

Kumpakaruṇaṉ, eyes like fire, scoops up a bamboo-covered mountain with his tongue and spits it far from his cave-like mouth, setting the battlefield ablaze. Even Irāmaṉ's lotus hand trembles in amazement at the feat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīyiṉāl ceyta kaṇṇuṭaiyāṉ, neṭum cikaiyiṉāl ticai tīya
vēyiṉāl tiṇi veṟpu oṉṟu nāviṉāl vicumpuṟa vaḷaittu ēnti,
pēyiṉ ārppuṭaip peruṅ kaḷam erintu eḻa, pilam tiṟantatu pōlum
vāyiṉāl cela, vīciṉaṉ; vaḷḷalum malark karam vitirppuṟṟāṉ