கம்பராமாயணம் 7665 · யுத்த 15.352

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாதம் கைகேளாடு இழந்தவன்,படியிடை இருந்து, தன் பகுவாயால்
காதம் நீளிய மலைகளைக் கடித்துஇறுத்து எடுத்து, வெங்கனல் பொங்கி,
மீது மீதுதன் அகத்து எழு காற்றினால்விசைகொடு திசை செல்ல
ஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம்உருமின் வீழ் உயிர் என்ன.

பொருள் · Meaning in Tamil

பாதம் கைகளோடு இழந்தனன் - கால்களையும் கைகளையும் இழந்தவனாகிய கும்பகருணன்; வெங்கனல் பொங்கி - கொடுஞ் சீற்றம் மிக்கு; படியிடை இருந்து - நிலத்திடத்திருந்து; தன் பகுவாயால் - தன் பிளந்த பெரிய வாயினால்; காதம் நீளிய மலைகளை - காதத்தளவு நீண்டு கடக்கும் மலைகளை; கடித்து இறுத்து எடுத்து - கடித்து ஒடித்து எடுத்து; மீது மீது தன் அகத்து எழு காற்றினால் - மேலும் மேலும் தன் உள்ளிருந்து எழும் பெருமூச்சாகிய காற்றினால்; விசை கொடு திசை செல்ல - விரைவு கொண்டு திசைகளில் செல்லுமாறு; ஊத ஊதப்பட்டு - ஊதுந்தொறும் ஊதுந்தொறும் அக்காற்றினால்; வானரம் உருமின் வீழ் உயிர் என்ன உலந்தன - குரங்குப்படை இடியினால் உயிரொழியும் உயிரினம் போல உயிரொழிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having lost feet and hands, he sat on the ground, and with his gaping mouth
  2. bit off and wrenched up mountains a league long, while fierce fire surged up,
  3. and with the wind rising again and again from within him, he blew them so they sped to the quarters;
  4. blown about, the monkeys perished like creatures struck down by thunder.

What the poem says

Unable to stand, Kumpakaruṇaṉ sits on the ground, bites off mountains with his huge mouth and blows them across the field with his breath. The monkeys hit by them die as if struck by lightning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pātam kaikaḷōṭu iḻantaṉaṉ, paṭiyiṭai iruntu, taṉ paku vāyāl
kātam nīḷiya malaikaḷaik kaṭittu iṟuttu eṭuttu, veṅ kaṉal poṅki,
mītu mītu taṉ akattu eḻu kāṟṟiṉāl vicaikoṭu ticai cella
ūta ūtappaṭṭu, ulantaṉa vāṉaramurumiṉ vīḻ uyir eṉṉa.