கம்பராமாயணம் 7664 · யுத்த 15.351

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கை இரண்டொடு கால்களும்துணிந்தன; கருவரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறாயிரம் பகழியால்வெரிந் உறத் தொளை போய,
செய்ய கண்பொழி தீச் சிகைஇருமடி சிறந்தது; தெழிப்போடு
பெய்யும் வானிடை இடியினும்பெருத்தது; வளர்ந்தது, பெருஞ்சீற்றம்.

பொருள் · Meaning in Tamil

கை இரண்டொடு கால்களும் துணிந்தன - கை இரண்டுடனே கால்கள் இரண்டும் துண்டுபட்டன; கருவரை பொருவும் தன் மெய் - தன்னுடைய பெரிய மலையை ஒத்த உடல்; இரண்டு நூறாயிரம் பகழியால் - இருநூறு ஆயிரம் அம்புகளால்; வெரிந் உறத் தொளை போய - முதுகுவரை மிகுதியாகத் துளையாக்கியது; செய்ய கண்பொழி தீச்சிகை - சிவந்த கண்களில் இருந்து நெருப்பு அனல்; இருமடி சிறந்தன - இரண்டு மடங்கு மிக்கது; பெருஞ் சீற்றம் - மிக்க சினம்; தெழிப்போடும் - பேரொலியோடு; வய்யம் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது - நில உலகில் வானத்திடையில் தோன்றும் இடியொலி போல் மிக்கு வளர்ந்தது.

வையம்-வய்யம்-போலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Both hands and both legs were cut off; his body, like a black mountain,
  2. was pierced right through to the back by two hundred thousand arrows;
  3. the flames pouring from his red eyes doubled;
  4. and his great fury, with its roar, swelled greater than the thundering clouds.

What the poem says

Now armless and legless, his body riddled with two hundred thousand arrows, Kumpakaruṇaṉ only grows angrier. Fire blazes twice as fiercely from his eyes, and his roaring rage outdoes the thunder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kai iraṇṭoṭu kālkaḷum tuṇintaṉa; karu varai poruvum taṉ
mey iraṇṭu nūṟāyiram pakaḻiyāl verin uṟat toḷai pōya,
ceyya kaṇ poḻi tīc cikai iru maṭi ciṟantaṉa; teḻippōṭum
peyyum vāṉiṭai maḻaiyiṉum peruttatu; vaḷarntatu, peruñ cīṟṟam.