கம்பராமாயணம் 7663 · யுத்த 15.350
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாறுகால் இன்றி - மற்றொரு கால் இல்லாமல்; வானுற நிமிர்ந்து - வானத்தைப் பொருந்துமாறு ஓங்கி; மாடு உள எலாம் - பக்கத்தில் உள்ளவைகளை எல்லாம்; வளைத்து ஏந்தி - நாவால் வளைத்துக் கடித்து ஏந்திய வண்ணம்; சூறை மாருதம் ஆம் என - கடுங்காற்று ஆகும் என்று கண்டோர் கூறுமாறு; சுழித்து மேல் - வட்டமிட்டு மேல்; தொடர்கின்ற தொழிலானை - கொல்லும் தொழிலைத் தொடர்கின்ற கும்பகருணனை; ஏறு சேவகன் - ஆண் சிங்கம் போன்றவனாகிய இராமன்; எரிமுகம் பகழியால் - நெருப்பை நுனியில் கொண்ட அம்பால்; இருநிலம் பொறை நீங்க - பெரிய நிலத்தின் பாரம் குறையும்படி; அறத்தொடு வேதங்கள் கூத்தாட - அறக்கடவுளும் வேதங்களும் கூத்தாட; வேறு காலையும் துணித்தனன் - மற்றொரு காலையும் துணித்தனன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With no second leg, rising to touch the sky, gathering up all that lay around,
- whirling like a cyclone, him whose work was to keep pressing on,
- the lion of a warrior, with an arrow of fiery point, to lift the burden from the broad earth,
- cut off the other leg too, while Dharma and the Vedas danced.
What the poem says
Even on one leg Kumpakaruṇaṉ towers to the sky, scooping up everything nearby and whirling like a storm. Irāmaṉ cuts off his remaining leg with a fire-tipped arrow, relieving the earth of a burden, while Dharma and the Vedas dance for joy.