கம்பராமாயணம் 7662 · யுத்த 15.349
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பந்தி பந்தியின் பற்குலம் மீன்குலம் பாகுபாடு உற - வரிசை வரிசையாக உள்ள பற்களின் கூட்டம் நட்சத்திரக் கூட்டம் போல் பாகுபாடு உற்று விளங்க; பாகத்து இந்து வெள் எயிறு இமைத்திட - அதனிடையே பிறைச் சந்திரன் போல் நீண்ட கோரைப் பல் விளங்கித் தோன்ற; குருதியாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் அந்தி வந்தென - குருதியாற்று ஒழுக்கினால் எழுகின்ற செம்மை செவ்வானத்தை உடைய அந்திப் பொழுது வந்தது போல் தோன்ற; அகல் நெடு வாய் விரித்து - தன் அகன்ற பெரிய வாயை விரித்துக்கொண்டு; நெடுநிலம் குழிபட - நெடிய நிலம் குழிபட; குரை கடல் கோத்து ஏற - அதனால் ஒலிக்கின்ற கடல் நீர் நிலத்தின் மீது பரவ; அடி ஒன்று கடிது ஒட்டி குந்தி வந்தனன் - ஒற்றைக் காலடி மேல் எழுந்து வலிமையாகப் பூமியில் பொருந்துமாறு நொண்டிக் கொண்டு போரிட வந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With rows upon rows of teeth set apart like hosts of stars,
- his white tusks gleaming among them like the moon,
- like a red evening rising with the flow of the river of blood, opening his wide, long mouth,
- he hopped forward on one foot, pounding it hard, so the broad earth sank and the roaring sea surged over.
What the poem says
Kumpakaruṇaṉ, now on one leg, opens his vast mouth: his teeth are like rows of stars and his tusks like crescent moons, while the blood around him makes him look like a red evening sky. He hops toward Irāmaṉ so heavily that the ground caves in and the sea overflows.