கம்பராமாயணம் 7661 · யுத்த 15.348

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நிலத்தகால், கனல், புனல், எனஇவை முற்றும் நிருதனது உருவு ஆகி,
கொலத் தகாதது ஓர் வடிவுகொண்டால் என உயிர்களைக் குடிப்பானை,
சலத்த காலனை, தறுகணர்க்குஅரசனை, தருக்கினின் பெரியானை,
வலத்த காலையும், வடித்த வெங்கணையினால் தடிந்தனன் தனு வல்லான்.

பொருள் · Meaning in Tamil

நிலத்த கால், கனல் புனல் விசும்பு இவை முற்றும் - நிலத்தொடு காற்று, நெருப்பு, நீர் ஆகாயம் என்கிற இவை முழுவதும்; நிருதனது உரு ஆகி - அரக்கனது வடிவம் பெற்று; கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டாலென - கொல்ல முடியாத ஒரு உருவைக் கொண்டது போலத் தோன்றி; உயிர்களைக் குடிப்பானை - உயிர்களை அழிப்பவனும்; சலத்த காலனை - சினம் கொண்ட யமன் போன்றவனும்; தறுகணர்க்கு அரசனை - அஞ்சாமையுடையோர்க்கு அரசன் போன்றவனும்; தருக்கினில் பெரியானை - செருக்கினில் மிக்கவனும் ஆகிய கும்பகருணனது; வலத்த காலையும் - வலது காலையும்; வடித்த வெங்கணையினால் - கூரிய கொடிய அம்பினால்; தனுவல்லான் தடிந்தனன் - வில்லாளியான இராமன் அறுத்து

நிலம் நீர் தீ வளி வான் என்னும் ஐந்தும் கலந்து மயக்கம் இவ்வுலகமும் உலகில் வாழும் உயிரினங்களின் உடலும் என்பது நூலோர் கருத்து. கும்பகருணனுடைய உடல் இவ்வுலகில் உள்ள பஞ்சபூதங்கள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிச் செய்தது போல் உள்ளதென்று முதலடியில் கூறுகிறார். பெரியானை - வலத்தகாலை தடிந்தனன் பெரியானது காலை வெட்டினான் என்றோ பெரியானைக் காலின் கண் வெட்டினான் என்றோ மாற்றிப் பொருள் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Him who seemed to have taken a form that could not be killed, as if earth, wind, fire, water and sky
  2. had all become the demon's body, him who drank the lives of creatures,
  3. the wrathful Death, the king of the fearless, the greatest in pride,
  4. his right leg too the master of the bow cut off with a sharp, fierce arrow.

What the poem says

Kumpakaruṇaṉ's body seems made of all five elements together, earth, wind, fire, water and sky, as if he were the whole world in one invulnerable form. Even so, Irāmaṉ, the master archer, cuts off his right leg.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nilatta kāl, kaṉal, puṉal, vicumpu ivai muṟṟum nirutaṉatu uru āki,
kolat takātatu ōr vaṭivu koṇṭāleṉa uyirkaḷaik kuṭippāṉai,
calatta kālaṉai, taṟukaṇarkku aracaṉai, tarukkiṉiṉ periyāṉai,
valatta kālaiyum, vaṭitta veṅ kaṇaiyiṉāl taṭintaṉaṉ taṉu vallāṉ.