கம்பராமாயணம் 767 · பால 12.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரங்கள் குவித்து - (சில மாதர் தம் வழிபடு தெய்வங்களை நினைந்து) தம் கைகளைக் கூப்பிக் கொண்டு; இருங்களிறு - ஆண்யானை போன்ற இக்குமரன்; இச் சிலை - இந்த வில்லை; இரு கண்கள் பனிப்ப - எங்களுடைய இரு கண்களும் ஆனந்தக் கண்ணீர் சொரியுமாறு; ஏற்றிலன் ஆயின் - நாண் ஏற்றாமல் போவானேயானால்; நரந்தம் நறை - கஸ்தூரி மணம் கமழும்; குழல் நங்கையும் - கூந்தலையுடைய சீதையும்; நாமும் - நாமும்; முருங்கு எரியில் - எரிக்கும் நெருப்பில்; புக - அழுந்தி; மூழ்குதும் - மூழ்குவோம்; என்பார் - என்று சொல்வார்கள்.
“இக் குமரன் வில் இறுக்காவிட்டால் சீதை கன்னியாகவே இறக்கவேண்டிவரும். அதைவிட நெருப்பில் பாய்ந்து உயிர் விடுதலே மேலானது. நம் அன்பான தோழி அவ்வாறு செய்தால் நாமும் அவளோடு எரிபுகுந்து இறப்போம்” என்றார் சில பெண்கள். நரந்தம் - கத்தூரி “நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக” - மதுரைக் காஞ்சி. 553
ஆங்கிலம் · English translationAI
Translation
- Folding their hands, both eyes wet with tears,
- 'If this great young elephant does not string this bow,
- the maiden with musk-scented, fragrant hair and we as well
- will enter the roaring fire and drown in it!' some said.
What the poem says
Other women pray with joined palms, their eyes full of tears. If this elephant-like youth fails to string the bow, Cītai will have to die unmarried, and they would rather she threw herself into fire; and if their beloved friend does that, they will die in the flames beside her.
The vow shows how completely the city's women have already pinned their hopes on Irāmaṉ.