கம்பராமாயணம் 766 · பால 12.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(சில மாதர்) காணும் - காணப்படுகின்ற; நெடுஞ்சிலை - நீண்ட இந்த வில்; கால் வலிது என்பார் - அடிப் பகுதி வலிமையுடையது என்று சொல்வார்கள்; நாண் உடை நங்கை - (சில மாதர்) நாணத்தையுடைய சீதையின்; நலம்கிளர் - அழகு விளங்கும்; செங்கேழ்ப் பாணி - சிவந்த கையில்; இவன் படர் செங்கை - இந்த இராமனது நீண்ட கைகள்; படாதேல் - பற்றாமல் போனால்; (இராமன் சீதையைப் பாணிக் கிரகணம் செய்யா விட்டால்); வாள் நுதல் நங்கையும் - ஒளியுள்ள நெற்றி படைத்த சீதையும்; வாழ்வு இலள் - (இனி) வாழ்வு அற்றவளே; என்பார் - என்று சொல்வார்கள்.
நங்கையும் - உம்மை இராமனும் வாழ்வு இலன் என்பதைக் குறிக்கும். நங்கை வாழ்விலள் என்பதற்கு - சீதை மணமின்றிக் கன்னியாகவே இருக்க வேண்டியவள்தான் என்ற கருத்துப் புலனாகும். இதுவரை ஆற்றல் மிக்க அரசர் பலரும் தோற்றோடிய செயலை அறிந்தவராதலால் இந்தக் குமரனும் அத்தகையவன் ஆவனோ என்று மாதர் இரங்கிக் கூறினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The long bow we see is strong at the base!' some said;
- 'If the bright red hand of the modest maiden, glowing with beauty,
- is not clasped by this man's long red hand,
- then the maiden of the shining brow has no life ahead,' some said.
What the poem says
Women in the crowd talk anxiously. Some note how massive the bow is at its grip. Others say that unless Irāmaṉ takes Cītai's hand in marriage, the ritual of clasping the bride's hand, she will have no life worth the name and must stay unmarried.
The word "too" in the last line hints that Irāmaṉ himself will also be without a life if he fails. Having seen so many strong kings defeated, the women fear this youth may fare the same.