கம்பராமாயணம் 765 · பால 12.27

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தூய தவங்கள் - புனிதமான தவங்களை; தொடங்கிய தொல்லோன் - தொடங்கி முடித்த பழையவனான கோசிக முனிவனால்; ஏயவன் - ஏவப்பெற்ற இராமன்; வல்வில் இறுப்பதன் முன்னம் - அந்த வலிய வில்லைக் (கையில் எடுத்து) முறிப்பதற்கு முன்பே; அனங்கன் - மன்மதன்; சேயிழை மங்கையர் - செவ்விய அணிகள் பூண்ட பெண்களின்; சிந்தை தொறு எய்யா - மனம் தோறும் (மலர் அம்புகளை) எய்து; ஆயிரம் வில்லை - மிகப்பல விற்களை; இறுத்தான் - முறித்தான்.

இராமன் சிவதனுசைக் கையில் எடுக்கச் சென்றபோது பார்த்த மங்கையர் பலரும் காமதேவனின் மலர்க் கணைக்கு இலக்காயினர் என்பது.

தொடங்கிய பெருந் தவங்களை விடாது செய்து முடித்து முழு வெற்றியும் பெற்ற முதியோன் ஆதலின் 'தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்' என்றார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the one sent by the ancient sage, who had undertaken pure austerities,
  2. could break the mighty bow,
  3. shooting into the heart of every finely jewelled woman,
  4. Anaṅkaṉ broke a thousand bows.

What the poem says

As Irāmaṉ walks to the bow, every woman watching falls in love with him. Kampaṉ puts it as a witty contest: before Irāmaṉ can break even one bow, Anaṅkaṉ, the bodiless god of love, has shot so many flower-arrows into so many hearts that he has broken a thousand of his own.

The sage who sent Irāmaṉ is described as the ancient one who carried his austerities through to complete success.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūya tavaṅkaḷ toṭaṅkiya tollōṉ
ēyavaṉ, val vil iṟuppataṉ muṉṉam,
cēyiḻai maṅkaiyar cintaitoṟu eyyā,
āyiram villai aṉaṅkaṉ iṟuttāṉ.