கம்பராமாயணம் 769 · பால 12.31

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஞான முனிக்கு ஒரு நாண் இலை!' என்பார்;
'கோன் இவனில் கொடியார் இலை!' என்பார்;
'மானவன் இ சிலை கால் வளையான் ஏல்,
பீன தனத்தவள் பேறு இலள்!' என்பார்.

பொருள் · Meaning in Tamil

ஞான முனிக்கு - தத்துவ ஞானியான விசுவாமித்திரனுக்கு; ஒரு நாண் இலை - சிறிதும் நாணமில்லை; (உலகத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இப் பெரிய வில்லை இச் சிறியவனை நாணேற்றுமாறு செய்தான்); என்பார் - என்று சில மாதர் கூறுவர்; கோன் இவனின் - (இச் சிறுவனை வில்லை வளைக்குமாறு கூறிய) இந்த அரசனைக் காட்டிலும்; கொடியோன் - கொடியன் ஒருவன்; இலை என்பார் - இல்லை என்று சொல்வார்கள் (சில மாதர்); மானவன் - வீரனாகிய இந்தக் குமரன்; இச் சிலை - இச் சிவ தனுசை; கால் வளையானேல் - இரு முனைகளையும் வளைக்கா விட்டால், (அப்போது); பீன தனத்தவள் - பருத்த கொங்கைகளுள்ள இச் சீதை; பேறு இலள் - திருமண வாழ்க்கையை இழந்தவளாவாள்; என்பார் - என்று கூறுவர் (சில மாதர்).

ஞான முனி - உலக நடை அறியாதவன் என்பது குறிப்பு. மானம் - பெருமை, வீரம். பீனம் - பருமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That sage of wisdom has no shame at all!' some said;
  2. 'There is no one crueller than this king!' some said;
  3. 'If this hero does not bend the ends of this bow,
  4. she of the full breasts will have no good fortune!' some said.

What the poem says

The women's anxious chatter continues. Some blame Vicuvāmittiraṉ: a sage lost in higher wisdom, he knows nothing of the world's ways and has put a mere boy up to this without a thought for what people will say. Others call Caṉakaṉ the cruellest of men for setting such a test.

And some simply fear for Cītai: if this young hero cannot bend the bow, she will lose all hope of married happiness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ñāṉa muṉikku oru nāṇ ilai!' eṉpār;
'kōṉ ivaṉiṉ koṭiyōṉ ilai!' eṉpār;
'māṉavaṉ ic cilai kāl vaḷaiyāṉēl,
pīṉa taṉattavaḷ pēṟu ilaḷ!' eṉpār.