கம்பராமாயணம் 7772 · யுத்த 17.1

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொழுந்து விட்டு அழன்று எரி - கொழுந்து விட்டு வெப்பத்தோடு எரிகின்ற, மடங்கல் கூட்டு அற - ஊழித்தீயையும் ஒப்பென்று சொல்லா அளவு; எழுந்து எரி வெகுளியான் - மேன் மேலும் எழுந்து எரிகின்ற சினத்தை உடையவன் ஆகிய இராவணன்; இரு மருங்கினும் தொழும் தகை அமைச்சரை - (தன்) இரு பக்கத்திலும் இருந்து தொழுகின்ற தன்மை உள்ள அமைச்சர்களை; சுளித்து நோக்குறா - மிக்க சினத்தோடு பார்த்து; இடியொடு முகிலும் சிந்த மொழிந்தனன் - இடியோடு மேகங்களும் சிதறிக் கீழே விழுமாறு பெருங்குரல் படப் பேசலானான்.

இராவணன் அமைச்சரைப் பார்த்து மிகச் சினந்து இடியோடு முகிலும் சிந்திச் சிதற வெடிபடப் பேசினான். மடங்கல் - ஊழித்தீ. கூட்டு - ஒப்பு, சுளித்து - சினந்து, முகம் சுளித்து எனினுமாம். ஏகாரம் இசைநிறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a rage that rose and burned so that even the fire of the world's end, flaming and blazing,
  2. could not be its equal, he looked fiercely at the ministers
  3. who stood on both sides of him in worship,
  4. and spoke, so that thunder and clouds came scattering down.

What the poem says

The chapter of Atikāyaṉ's death opens. Irāvaṇaṉ, having left the grove after hearing of Kumpakaruṇaṉ's death, blazes with an anger fiercer than the fire that ends the world. He glares at the ministers standing respectfully on either side and roars at them so loudly that clouds and thunder seem to shatter and fall.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koḻuntu viṭṭu aḻaṉṟu eri maṭaṅkal kūṭṭu aṟa
eḻuntu eri vekuḷiyāṉ iru maruṅkiṉum
toḻum takai amaiccaraic cuḷittu nōkkuṟā
moḻintaṉaṉ iṭiyoṭu mukilum cintavē.