கம்பராமாயணம் 7771 · யுத்த 16.95

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவள் உரை நாளும் தேறுவாள் நங்கையும் - அந்தத் திரிசடையின் சொல்லைக் கேட்டு எப்பொழுதும் ஆறுதல் அடையும் சீதையும்; சங்கையும், இன்னலும் துயரும் தள்ளினாள் - (தன் மனத்தில் இருந்த) ஐயத்தையும் (மனது) துன்பத்தையும் (உடல்) துயரையும் நீக்கினாள்; இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் - அவ்விடத்தில் இருந்து (சினத்தோடு) சென்ற இலங்கை காவலனாகிய இராவணன்; அங்கு நின்று இயற்றியது அறைகுவாம் - தன் அரண்மனையில் இருந்து செய்ததை இனிமேல் கூறுவோம்.

இன்னல் துயர் - ஒரு பொருட் பன்மொழி. இவற்றுள் ஒன்றை மனத்துக்கும் ஒன்றை உடல்சார் மெய்ப்பாட்டிற்கும் கொள்க. இப்படலத்தில் வஞ்சனை, அச்சுறுத்தல், அஞ்சுதல் முதலிய செயல்களும் சாவு, அழுகை போன்ற அவல நிலைகளும், மகிழ்ச்சியின் உள்ளடங்கு நிலைகளும் விளக்கப்பட்டுள்ள திறத்தை உன்னுக. இப்படலத்தில் வரும் உணர்ச்சி மாற்றங்கள் இப்படலத்தை நாடகக் கூறு உடையதாக்கிக் கம்ப நாடகம் என்ற தொடருக்கு உரிய விளக்கமாக அமைவது எண்ணி மகிழத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. And the lady, comforted ever by her words,
  2. cast off her doubt, her distress and her sorrow;
  3. what the guardian of Ilaṅkai, who went away from here,
  4. did there, we shall now tell.

What the poem says

Reassured by Tiricaṭai, Cītai casts off her doubt and her grief. The poet then turns away from the aśoka grove to follow Irāvaṇaṉ to his palace. So ends the chapter of the illusory Caṉakaṉ, a chapter of deceit, threats, terror, death, lament and hidden joy. Its swift changes of mood make it truly dramatic, which is why the poem has been called Kamba's drama.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṅkaiyum avaḷ urai nāḷum tēṟuvāḷ
caṅkaiyum iṉṉalum tuyarum taḷḷiṉāḷ;
iṅku niṉṟu ēkiya ilaṅkai kāvalaṉ
aṅku niṉṟu iyaṟṟiyatu aṟaikuvām arō.