கம்பராமாயணம் 7778 · யுத்த 17.7

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விதிகாயினும் வீரம் வெலற்கு அரியான் - விதியே சினந்தாலும் வெல்லமுடியாத வீரத்தை உடைய; அதிகாயன் எனும் பெயரான் - அதிகாயன் என்னும் பெயரை உடையவன்; நதி காய் நெடுமானமும் நாணும் உறா - ஆற்று நீரும் சுடுமாறு பெரிய அவமானத்தால் தோன்றிய கடுஞ்சினமும் நாணமும் அடைந்து. மதி காய் குடை மன்னனை - மதியை வெல்லும் வெண் கொற்றக் குடையை உடைய இராவணனை; வைது உரையா அறைவான் - பழித்துக் கூறிக் கூறத் தொடங்கினான்.

விதி - விதிக்கும் கடவுள் பிரமன் என்பர். பிரமன் தலை எழுத்து என்ற வழக்கை உன்னுக. நெடுமானம் - பெரிய அவமானம். ஈண்டு அதனால் தோன்றிய கடுஞ்சினம். உறா - உற்று, செய்யா எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். உரையா - உரைத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Gripped by a great sense of insult and a shame that would scorch a river,
  2. rebuking the king whose umbrella outshines the moon,
  3. the one whose valour was hard to conquer even if Fate grew angry,
  4. he who bore the name Atikāyaṉ, spoke.

What the poem says

Atikāyaṉ, a son of Irāvaṇaṉ, now steps forward. Stung by his father's insults, he burns with a fierce anger and shame, hot enough to scorch a river. His valour cannot be overcome even if Fate itself, Brahmā the writer of destiny, turns against him. He rebukes Irāvaṇaṉ, whose white royal umbrella outshines the moon. His name means “one of immense body”.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nati kāy neṭu māṉamum nāṇum uṟā
mati kāy kuṭai maṉṉaṉai vaitu uraiyā
viti kāyiṉum vīram velaṟku ariyāṉ
atikāyaṉ eṉum peyarāṉ aṟaivāṉ.