கம்பராமாயணம் 778 · பால 12.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வயிரியர் - கூத்தர்களின்; மதுர கீதம் - இனிய பாடல்களும்; மங்கையர் அமுத கீதம் - மகளிரின் அமுதப் பாடல்களும்; செயிரியர் - யாழினை மீட்டும் பாணர்; மகரயாழின் தேன்பிழி - மகரயாழிலே தோன்றும் தேன் பிழிந்தாற் போன்ற; தெய்வ கீதம் - பாடும் தெய்வத்தன்மையுள்ள பாடல்களும்; வேயின் பயிர்களை - புல்லாங் குழலிலிருந்து ஏழிசை அடிப்படையில் தோன்றும் பல்வேறு ராகங்கள்; கீதம் - ஒலிக்கவும்; என்ற இவை - என்ற இவற்றை, பருகி - செவியிற் கேட்டு; விண்ணோர் - தேவர்கள்; உயிர்உடை - உயிருள்ள; உடம்பு எல்லாமும் - உடல் எல்லாம்; ஓவியம் ஒப்ப நின்றார் - சித்திரம் போல (அசைவற்று) நின்றார்கள்.
சீதையின் திருமணம் விரைவில் நிகழும் என்ற மகிழ்ச்சியால் பாணர் முதலியோரின் கீதங்கள் நிகழ்ந்தன; அப் பாடல் இனிமையில் ஈடுபட்டு விண்ணவர் சித்திரம்போல நின்றனர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sweet songs of the minstrels, the nectar songs of the women,
- the divine songs, like honey wrung from the bards' makara lutes,
- the songs of the flute in all their branching melodies: drinking these in, the gods
- stood, living bodies and all, like figures in a painting.
What the poem says
Music fills the city: songs of performers and of women, the lutes of the bards, flutes playing melody after melody. The gods, watching from above, are so entranced that they stand motionless, living beings frozen like figures in a painting.
Throughout these verses Kampaṉ shows heaven and earth sharing one celebration.