கம்பராமாயணம் 779 · பால 12.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அமரர் நாட்டுத் தையலார் - விண்ணுலகத்து மகளிர்; ஐயன் வில் இறுத்த - இராமன் வில்லை முறித்த; ஆற்றல் காணிய - வல்லமையைக் காணும் பொருட்டு; இழிந்து - (வானிலிருந்து) இறங்கி வந்து; செய்கையின் வடிவின் - (செய்யும்) செயலாலும் வடிவத்தாலும்; ஆடல் பாடலின் - ஆடல் பாடல்களாலும்; தெளிதல் தேற்றார் - (தமக்கும் மண்ணுலக மடந்தையர்க்கும்) வேறுபாடு காண முடியாதவர்களாய்; பாரின் மகளிரை - மண்ணுலக மங்கையரை; தழுவிக் கொண்டார் - (வானுலக மங்கையர் என்று கருதி மகிழ்ச்சியால்) தழுவிக் கொண்டார்கள்; மை அரி நெடு நோக்கம் - (அப்போது) அம் மங்கையரின் மையிட்டுச் செவ்வரி படர்ந்த நீண்ட பார்வையுள்ள; கண் இமைத்தலும் - கண்கள் இமைகொட்டி நின்ற அளவில்; மயங்கி நின்றார் - (இவர் நம் இனத்தவர் அல்லர் என்று) மயங்கி நின்றார்கள்.
வானத்திலிருந்து இறங்கிவந்த தேவ மகளிர் செயல் முதலானவற்றால் ஒத்திருந்த நிலவுலக மடந்தையரைத் தம்மவர் எனக்கருதி மகிழ்ச்சியால் தழுவிக் கொள்ள, அப்பொழுது அவர்களின் கண் இமைத்தலைக் கண்டு திகைத்தனர் என்பது - மயக்கவணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To see the might of the lord who broke the bow, the maidens of the land of the gods
- came down and embraced the women of the earth;
- unable to tell them apart by their ways, their forms, their dancing and singing,
- they stood bewildered when those long, kohl-lined, red-streaked eyes blinked.
What the poem says
Heavenly women come down to see the hero who broke the bow. The women of Mithilā are so like them in beauty, manners, dance and song that the goddesses take them for their own kind and embrace them.
Only when the earthly women blink do the visitors realise their mistake, since divine beings never blink. The verse is a classic figure of confusion, where likeness leads to a mistaken identity.