கம்பராமாயணம் 7788 · யுத்த 17.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெந்திறலோய் - கொடிய வலிமை படைத்தவனே! போர் ஏறிட ஏறுவ - போர்க்களத்தில் மேன்மேற் செல்வன; சிவற்கு உளது ஓர் ஏறு ஒப்பு உளவாம் - சிவபிரானுக்கு உளதாகிய ஒப்பற்ற இடபத்தை ஒப்பாக உள்ளனவாகிய; வார் ஏறுவன் வயப்பரி - வார் பூண்ட வலிய குதிரைகள்; ஆயிரம் பூணுறு திண்தேர் ஏறுதி - ஆயிரம் பூட்டப்பட்ட வலிய தேரில் ஏறுக, தந்தனென் - அதனை உனக்குத் தந்தேன்.
போர் ஏறிட ஏறுவ, சிவற்கு ஓர் ஏறு ஒப்பு உளவாம். வார் ஏறுவன் வயப்பரி ஆயிரம் பூணுறு திண்தேர் எனக் கூட்டி உரைக்க. ஏறு - காளை. இத்தேர் இராவணனுக்குப் பிரமன் தந்தது என உரைப்பர் அது கருதியே திண் தேர் என்றனன் எனவும் கருதுவர். திண்தேர் வெந்திறல் - பண்புத் தொகைகள், ஏறுதி - முன்னிலை ஒருமை வினை முற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Like the one bull that Civaṉ has, a match for it,
- a thousand mighty strapped horses that surge forward
- as the battle mounts are yoked to a sturdy
- chariot; mount it; I have given it to you, you of fierce strength!”
What the poem says
Irāvaṇaṉ gives Atikāyaṉ a great chariot drawn by a thousand harnessed horses, each as powerful as Nandi, Śiva's bull, and surging ever forward in battle. Some say this chariot was a gift from Brahmā to Irāvaṇaṉ, which is why it is called sturdy.