கம்பராமாயணம் 7829 · யுத்த 17.58

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘கடம் ஏய் கயிலைக் கிரி கண்ணுதலோடு
இடம் ஏற எடுத்தனன் ‘என்று இவனைத்
திடம் மேலுலகில் பல தேவரொடும்
வட மேரு எடுக்க வளர்த்தனனால்.

பொருள் · Meaning in Tamil

கடம் ஏய் கயிலைக் கிரி - காடுகள் பொருந்திய கயிலை மலையை; கண்ணுதலோடு இடம் ஏற எடுத்தனம் என்று - நெற்றிக் கண்ணையுடைய சிவபிரானோடு அடியோடு (நாம்) பெயர்த்து எடுத்தனம் என்பதற்காக; இவனைப் பல தேவரோடும் உலகில் திடமே வடமேரு எடுக்க - இவ்வதிகாயனைப் பல தேவர்களோடு உலகில் வலிமை மிக்க வடமேரு மலையை எடுக்க; வளர்த்தனன் - வளர்த்தான்.

கடம் - காடு, ஏய் - பொருந்திய, எடுத்தனம் - பன்மை சிறப்புக் குறித்து வந்தது. ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Saying, ‘We lifted the forested mountain of Kailāsa
  2. right off its place, together with the one with the eye in his brow’,
  3. he raised this man, along with many gods, in the world,
  4. to be strong enough to lift northern Mēru.”

What the poem says

Vīṭaṇaṉ goes on. Irāvaṇaṉ, proud of having once uprooted Mount Kailāsa with Śiva, the god with the eye on his forehead, still upon it, raised his son Atikāyaṉ to be strong enough to lift even northern Mount Mēru, along with many of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaṭam ēy kayilaik kiri kaṇṇutalōṭu
iṭam ēṟa eṭuttaṉam ‘eṉṟu ivaṉait
tiṭamē ulakil pala tēvaroṭum
vaṭa mēru eṭukka vaḷarttaṉaṉāl.