கம்பராமாயணம் 785 · பால 12.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அந்த இராமனது தோளின் அழகைக் கண்டு) நாண் உலாவு மேருவோடு - ஆதிசேடனாகிய நாணோடு மேரு மலை போன்ற வில்லுடன்; நாண் உலாவு - (அவ் வில்லின்) நாணில் உலாவுகின்ற; பாணியும் - கையும்; தூண் உலாவு தோளும் - தூண்களை ஒத்த தோள்களும்; வாளி ஊடு - அம்புகள் இடையே; உலாவு தூணியும் - செருகப் பெற்ற அம்பறாத் தூணியும்; வாள் நிலாவின் - ஒளிமிக்க சந்திரனைப் போன்ற; நூல் உலாவு - பூணூல் அலையும்; மாலை மார்பும் - வெற்றிமாலை சூடிய திருமார்பும்; மீளவும் - மறுமுறையும்; காணல் ஆகும் ஆகின் - காணக் கூடுமாயின்; ஆவி - என்னுயிரை; காணல் ஆகும் - நான் காணமுடியும் (அது கூடுமா).
'என் ஆவி வில்லும் கையுமாகியும், தூணியும் தோளுமாகியும், பூணூலும் மார்புமாகியும் உள்ளது. அத்தகைய ஆவியைக் காணின் எனது ஆவியைக் கண்டதாகும். அவ்வாறு காணாவிட்டால் உயிர் இழப்பேன்' என்று சீதை கூறுகிறாள்.
தூண் உலாவு - உலாவு - உவம உருபு. உலாவ என்பது வெவ்வேறு பொருளில் வந்தது - சொற்பொருள் பின்வருநிலையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The hand that moves on the bowstring, with the Mēru-like bow on which the string runs,
- the shoulders like pillars, the quiver where the arrows move,
- the garlanded chest where the thread plays like bright moonlight: if once more
- I may see these, then perhaps I may see my life again!'
What the poem says
Cītai recalls what she saw of Irāmaṉ: his hand on the string of a bow as vast as Mēru, his pillar-like shoulders, the quiver of arrows, the sacred thread gleaming like moonlight across his garlanded chest.
Her life, she says, has gone into these things; to see them again would be to see her own life restored. The verse repeats the word ulāvu, "moving, playing", in several senses, a deliberate figure of repetition.