கம்பராமாயணம் 786 · பால 12.48

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"விண் தலம் கலந்து இலங்கு திங்களோடு மீது சூழ்
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார்சிலைக்
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டுகொண்டு என் ஆவியை
உண்டது உண்டு, என் நெஞ்சின் இன்றும் உண்டு,அதுஎன்றும்உண்டு,அரோ!”

பொருள் · Meaning in Tamil

விண்தலம் - வானுலகத்தில்; கலந்து இலங்கு - சேர்ந்து விளங்கும்; திங்களோடு - சந்திரனோடும்; மீது சூழ் வண்டு அலம்பு - (தேனைப் பருக) மேலே சுற்றிவரும் வண்டுகள் ஒலிக்கின்ற; அலங்கல் தங்கு - மாலை சூடிய; பங்கியோடும் - மயிர் முடியோடும் (குஞ்சி) கூடிய; வார்சிலை - நீண்ட வில்லைத் தரித்த; கொண்டல் ஒன்று - மேகம் ஒன்று; இரண்டு கண்ணின் - (தன்) இரு கண்களால்; என் ஆவியை - எனது உயிராகிய நீரை; மொண்டு கொண்டு - முகந்து; உண்டது உண்டு - பருகிவிட்டது என்பது உண்மைதான்; அது - அந்த மேகமானது; என் நெஞ்சின் - எனது மனத்தில்; இன்றும் உண்டு - (நீங்காமல்) இப்பொழுதும் உள்ளது; என்றும் உண்டு - (அது மட்டுமற எப்போதும் அது தங்கியிருக்கும்.

முகத்தைத் 'திங்கள்' எனவும் இராமனை 'வார்சிலைக் கொண்டல்' எனவும் உருவகத்தால் சீதை கூறினாள்.

மேகம் ஆவியால் ஆனது என்ற வழக்கிற்கும் ஏற்பக் “கொண்டல் என் ஆவியை மொண்டு உண்டது” எனக் கூறிய நயம் உணரத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With a moon that shines as if it had mingled with the sky, and a crown of hair
  2. where garlands rest and bees hum as they circle above, a cloud
  3. that bears a long bow scooped up my life with its two eyes
  4. and drank it, that is true; it is still in my heart, and it will be there always!'

What the poem says

Cītai pictures Irāmaṉ as a dark rain cloud carrying a long bow, with a moon for a face and bee-haunted garlands in his hair. With his two eyes, she says, that cloud scooped up and drank her life.

The image works on two levels: a cloud draws up water, and the Tamil word āvi means both "life" and "vapour", so a cloud made of vapour drinking her āvi is especially fitting. Yet the cloud has not left her; it lives in her heart and always will.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"viṇtalam kalantu ilaṅku tiṅkaḷōṭu mītu cūḻ
vaṇṭu alampu alaṅkal taṅku paṅkiyōṭum vār cilaik
koṇṭal oṉṟu iraṇṭu kaṇṇiṉ moṇṭukoṇṭu eṉ āviyai
uṇṭatu uṇṭu, eṉ neñcil iṉṉum uṇṭu, atu eṉṟum uṇṭu, arō!”