கம்பராமாயணம் 79 · பால 2.59

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொற்பில் நின்றன பொலிவு; பொய் இலா
நிற்பின் நின்றன நீதி; மாதரார்
அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன காலம் மாரி ஏ.

பொருள் · Meaning in Tamil

பொற்பின் நின்றன பொலிவு - (அந்த நாட்டு மக்களின் அகத்தழகால்) நிலைத்திருந்தது புறத்தழகு; பொய்யிலா நிற்பின் நின்றன நீதி - அவர்களது பொய்ம்மை இல்லாத மெய்ந்நிலையால் நீதி நிலைத்து நின்றது; மாதரார் அற்பின் நின்றன அறங்கள் - (அந்த நாட்டுப்) பெண்களின் அன்பால் அறங்கள் நிலைபெற்றிருந்தன; அன்னவர் கற்பின் நின்றன காலமாரியே - அப்பெண்களது கற்பினால் பருவமழை நிலைத்திருந்தது.

அந்நாட்டு மக்கள் அழகெனக் கருதுவது நற்குணத்தினையே என்பதால் 'பொற்பின் நின்றன பொலிவு' என்றார் பொய்யிலா நிற்பு: மெய்ந்நெறி நிற்றல் அன்பு: 'அறத்திற்கே அன்பு சார்பென்ப' என்ற குறளுக்கேற்ப 'அற்பின் நின்றன அறங்கள்' என்றார். கற்புடைப் பெண்களுக்குக் கடவுளரும் பணி புரிவர் என்பதால் 'கற்பின் நின்றன காலமாரி' என்றார்.

இப்பாடலை முதல் இரண்டு அடிகள் (அருமழை வேண்டினும் தருகிற்கும் தன்மையன் (கலி) ஆண்களைப் பற்றியது எனவும் கடைசி இரண்டடிகள் பெண்களைப் பற்றியது எனவும் கூறுவர். முழுவதும் பெண்களைப் பற்றியதே என்று கூறுவதும் பொருந்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Beauty rested on goodness; on steadfastness
  2. free of falsehood rested justice; on the love
  3. of the women rested righteousness; on their
  4. chastity rested the timely rain.

What the poem says

The section on conduct and virtue. In Kōcalam outward beauty rests on inner goodness, since the people count only virtue as beauty. Justice rests on their unfailing truthfulness, and righteousness on the love of the women, as the Tirukkuṟaḷ says that love is the support of dharma. The rains come in their season because of the women's chastity, for tradition holds that even the gods serve a faithful wife.

Some take the first two lines to describe the men and the last two the women; others read the whole verse as praise of the women.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṟpiṉ niṉṟaṉa polivu; poy ilā
niṟpiṉ niṉṟaṉa nīti; mātarār
aṟpiṉ niṉṟaṉa aṟaṅkaḷ; aṉṉavar
kaṟpiṉ niṉṟaṉa kāla māriyē.