கம்பராமாயணம் 806 · பால 13.2

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திருவருள் முகந்தனர் - (வாயிலையடைந்த தூதர்) உள்ளே செல்ல அரசனது அருளைப்பெற்றவராய்; முறையின் எய்தினார் - அரசவையில் செல்ல வேண்டிய முறைப்படி அரசன் முன்பு சென்று; திகழ்ந்து ஒளிர் - மிக விளங்குகின்ற; கழல் இணை தொழுது - தசரத மன்னனின் அடிகளை வணங்கி; செல்வனைப் புகழ்ந்தனர் - அவ்வரசனைப் புகழ்ந்து; அரச - மன்னரே; நின் புதல்வர் - உன் மைந்தர்; போய பின் - (விசுவாமித்திரனுடன் இங்கிருந்து சென்றபின்; நிகழ்ந்ததை - நடந்த செயல்; இது என - இதுவாகும் என்று; நெடிது கூறினார் - விரிவாகக் கூறினர்.

அரசவைக்கு அன்னிய நாட்டுத் தூதுவர் வருங்காலத்து வாயில் காப்பவர் “அரசனிடம் சென்று இந்த நாட்டுத் தூதுவர் வந்துள்ளார்” என்று உணர்த்தி, அவனது உத்தரவின்படி உள்ளே விடுதல் மரபாகும். முறை: அரசவையில் செல்லும் தூதர்கள் அடக்கத்துடன் நிற்கும் முறைமையை உணர்த்தியது. செல்வனைப் புகழ்தல்: தூதர்கள் அரசனை வணங்கி எழுந்ததும் அவனைப்புகழ்தல் மரபாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Receiving the king's gracious leave, they entered in due order,
  2. bowed at his two shining, anklet-bright feet, and praised
  3. that lord: 'O king, after your sons went away,
  4. this is what has happened,' and they told it all at length.

What the poem says

The messengers are admitted with full court protocol: the gatekeepers announce them, the king gives leave, and they enter modestly, bow at his feet and praise him, as envoys from another kingdom should.

Then they tell Tacarataṉ in detail everything his sons have done since leaving Ayōttī with Vicuvāmittiraṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mukantaṉar tiruvaruḷ, muṟaiyiṉ eytiṉār,
tikaḻntu oḷir kaḻal iṇai toḻutu, celvaṉaip
pukaḻntaṉar,' araca! niṉ putalvar pōya piṉ
nikaḻntatai itu' eṉa neṭitu kūṟiṉār.