கம்பராமாயணம் 805 · பால 13.1

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(சனகனால் அனுப்பப்பெற்று) விரைந்து சென்ற தூதர்களும்; காலில் சென்று - காற்றைப் போல விரைந்து சென்று; இடிக்குரல் - இடியின் குரலைப் போல; முரசு அதிர் - பேரிகைகள் முழங்குகின்ற; அயோத்தி எய்தினார் - அயோத்தி நகரை அடைந்தனர்; அடி இணை தொழ - அம்மன்னனுடைய பாதங்களைத் தொழுவதற்கு; இடம் இன்றி - (உள்ளே செல்ல) இடம் கிடைக்காததால்; மன்னர் தம் முடியொடு - சிற்றரசர்களின் பொன்முடிகளோடு; முடி பொரு - முடிகள் தாக்கிக் கொள்கின்ற; வாயில் - அரண்மனை வாயிலை; முன்னினார் - அடைந்தார்கள்.

மணச் செய்தி சொல்ல வருகின்ற தூதர்களுக்கு ஏற்ப மங்கலமாக “முரசு அதிர் அயோத்தி” என்றார்.

மன்னர்கள் தசரதனை வணங்க முந்துகின்றார்கள். அதனால் அவர்களின் பொன்முடியோடு முடிகள் மோதுகின்றன என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The swift messengers, travelling like the wind,
  2. reached Ayōttī, where drums boom with the voice of thunder,
  3. and, finding no room to bow at the king's two feet,
  4. came to the gate where the crowns of kings knock against crowns.

What the poem says

A new chapter begins, the chapter of the setting out. Caṉakaṉ's messengers race to Ayōttī, Tacarataṉ's capital, where the booming of drums is an auspicious welcome for men bringing news of a wedding.

They arrive at the palace gate, which is so crowded with vassal kings jostling to pay homage that their crowns knock together, and there is no room even to reach the king's feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭukiya tūtarum, kālil kāliṉ ceṉṟu,
iṭi kural muracu atir ayōtti eytiṉār,
aṭi iṇai toḻa iṭam iṉṟi maṉṉartam
muṭiyoṭu muṭi poru vāyil muṉṉiṉār.