கம்பராமாயணம் 8100 · யுத்த 18.53

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எடுத்தது நிருதர் தானை; இரிந்தது குரங்கின் ஈட்டம்;
தடுத்தனர் முகங்கள் தாங்கி, தனித்தனி தலைவர் தள்ளி
படுத்தனர்; அரக்கர் வேலை பட்டது; படவும் பாரார்
கடுத்தனர்; கடுத்த பின்னும், காத்தனர் கவியின் வீரர்.

பொருள் · Meaning in Tamil

நிருதர் தானை எடுத்தது - (முதலில்) அரக்கர் சேனை (வெற்றித்) தலை எடுத்தது; குரங்கின் ஈட்டம் இரிந்தது - (அதனால்) குரங்குகளின் கூட்டம் (முன்நிற்க முடியாமல்) புறமுதுகிட்டு ஓடியது; தலைவர் - (அந்நிலையில்) குரங்குப்படைத் தலைவர்கள்; தனித்தனி - தனித்தனியாக, முகங்கள் தாங்கி தடுத்தனர் - (அரக்கரின்) முன்னணிப் படைகளைத் தாங்கித் தடுத்தவர்களாய்; தள்ளிப் படுத்தனர் - (அவர்களை) வீழ்த்திக் கொன்றார்கள்; அரக்கர் வேலை பட்டதும் - (தலைவர்களால்) அரக்கர் படையாகிய பெருங்கடல் அழிந்ததும்; படவும் பாரார் கடுத்தனர் - (அவ்வாறு) அழிவதைப் பற்றி எண்ணிப் பாராதவர்களாய் (அரக்கர் மீண்டும் சினந்து) தாக்கினார்கள்; கடுத்தபின்னும் - (இவ்வாறு அரக்கர் சினந்து) தாக்கிய பின்பும்; கவியின் வீரர் காத்தனர் - குரங்குத் தலைவர்கள் தங்கள் படையைக் காத்து நின்றனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demon army surged forward; the monkey host broke and fled;
  2. the leaders, each on his own, took the brunt of the fronts, checked them,
  3. struck them down and killed; though the demon sea had been destroyed and was dying still,
  4. they paid no heed and raged on; even then, the monkey heroes held their ground.

What the poem says

The tide of battle turns. The demons first push the monkey troops into flight. Then the monkey commanders, each taking a sector, hold the line and cut down the demons' front ranks. The demons, heedless of their losses, attack again in fury, but the monkey leaders stand firm and protect their men.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭuttatu nirutar tāṉai; irintatu kuraṅkiṉ īṭṭam;
taṭuttaṉar mukaṅkaḷ tāṅki, taṉit taṉit talaivar taḷḷi
paṭuttaṉar; arakkar vēlai paṭṭatum paṭavum pārār
kaṭuttaṉar; kaṭutta piṉṉum, kāttaṉar kaviyiṉ vīrar.