கம்பராமாயணம் 8099 · யுத்த 18.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாக்கிய திசைகள் தோறும் - (எதிர்த்துத்) தாக்கிப் (போரிடுகிற) (எல்லாத்) திசைகளிலும்; தலைத்தலை மயங்கி - தமக்குள்ளே (நேரிடையாகக்) கலந்து மயங்கி; தம்மில் நூக்கிய களிறும் - தம்மை எதிர்த்த யானைகளையும்; தேரும் - தேர்களையும்; புரவியும் - குதிரைப் படைகளையும்; நூழில் செய்ய - (குரங்குப்படை) கொன்று குவிக்க; ஆக்கிய செருவை நோக்கி - (அவ்வாறு) நடந்த (அப்) போரைப் பார்த்து; முனிவர் - முனிவர்கள்; அமரரோடு அசுரர் போரைத் தூக்கினர் - தேவர்களோடு அசுரர்கள் (முன்பு செய்த) போரை ஒப்பிட்டுப் பார்த்து; என்னை - (இப்போரின் தன்மை) எவ்வளவு; இதற்கு அது தோற்கும் - இப்போருக்குத் தேவாசுரப் போர் ஒப்பாகாது தோற்கும்; என்றார் - (என்று வியந்து) கூறினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In every quarter where they clashed, mingling head to head,
- the elephants, chariots and horses that charged one another were slaughtered;
- seeing the battle so waged, the sages weighed against it the war
- of the gods and the asuras, and said, 'What a thing! That one loses to this.'
What the poem says
The sages watching from above compare this battle with the legendary war between the gods and the asuras, which was the standard for the greatest of all battles. They decide that the old war cannot match this one.