கம்பராமாயணம் 812 · பால 13.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேம் பொழி - தேனைச் சொரிகின்ற; துழாய்முடி - துழாய் மாலையணிந்த திருமுடியையும்; செங்கண் மாலவன் - சிவந்த கண்களையும் கொண்ட திருமால்; ஆம் பரிசு - (தன்) முறைமைக்கு ஏற்றவாறு; உலகு எலாம் - (சுவர்க்கம், மத்திமம், பாதாளம் என்ற) மூவுலகங்களையும்; அளந்து கொண்டநாள் - (தன் மூவடியால்) அளந்து கொண்ட காலத்தில்; சாம்புவன் - (அச்செய்தியை) சாம்பவான்; திரிந்து என - பறையறைந்து திரிந்தது போல; வாம்பரி - தாவிச் செல்லும் குதிரைகளாகிய; விரிதிரைக்கடலை - விரிந்த அலைகளையுடைய கடலுக்கு (சேனைக்கு), வள்ளுவன் - பறையறையும் வள்ளுவன்; திரிந்து சாற்றினான் - திரிந்து (முரசு அறைந்து) செய்தி தெரிவித்தான்.
வள்ளுவன் - முரசு அறைந்து செய்தி தெரிவிப்போன். மாலவன் உலகெலாம் அளந்து கொண்ட நாள் சாம்புவன் திரிந்தென வள்ளுவன் திரிந்து சேனைக் கடலுக்குக் கூறினான். தாவிச் செல்லும் குதிரைகளைக் கடல் அலைகளுக்கு ஒப்புக் கூறுதல் மரபு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the sea of leaping horses with its spreading waves the herald,
- as on the day when red-eyed Māl, his crown of tulasi dripping honey,
- measured out all the worlds, as befitted him,
- Cāmpuvaṉ went round proclaiming it, went round and proclaimed the news.
What the poem says
The royal herald goes round the whole army, a sea whose waves are leaping horses, beating his drum and announcing the march.
Kampaṉ compares him to Cāmpuvaṉ, the bear king, who in legend went round the universe with a drum proclaiming the news when Tirumāl, as the dwarf Vāmaṉa, grew to giant size and measured all three worlds in three strides.