கம்பராமாயணம் 8180 · யுத்த 18.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1பார்த்த பார்த்த திசைதொறும் பன்மழை
போர்த்த வானம் என இடி போர்த்து எழ
ஆர்த்த ஓசையும் அம்பொடு வெம்படை
தூர்த்த ஓசையும் விண்ணினைத் தூர்த்தவால்.
பொருள் · Meaning in Tamil
பார்த்த பார்த்த திசை தொறும் - பார்த்த பார்த்த திக்குகள் எல்லாம்; பல் மழை - பல மேகங்கள்; போர்த்த வானம் என - சூழ்ந்து மூடிய வானம் போல; இடி போர்த்து எழ - இடியோசை பரந்து உண்டாகும்படி; ஆர்த்த ஓதையும் - (வீரர்) பேரொலி செய்த ஓசையும்; அம்பொடு - அம்புகளும்; வெம்படை - பிற கொடிய படைக்கலங்களையும்; தூர்த்த ஓதையும் - செலுத்தியதால் உண்டாகும் ஓசையும்; விண்ணினைத் தூர்த்தவால் - ஆகாயத்தை நிறைத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In every direction one looked, like a sky covered
- with many clouds, so that thunder rose spreading everywhere,
- the noise of their shouting and the noise of arrows
- and fierce weapons being hurled filled up the sky.
What the poem says
The din of the renewed battle fills the heavens. Wherever one looks, the war cries and the clatter of arrows and weapons are like thunder from a sky covered with storm clouds.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pārtta pārtta ticaitoṟum pal maḻai
pōrtta vāṉam eṉa iṭi pōrttu eḻa
ārtta ōtaiyum ampoṭu vem paṭai
tūrtta ōtaiyum viṇṇiṉait tūrttavāl.