கம்பராமாயணம் 8318 · யுத்த 18.271

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“

பொருள் · Meaning in Tamil

ஆரியன் - இராமன்; அவனை நோக்கி - அந்தக் கருடனைப் பார்த்து; ஆர் உயிர் உதவி - (நாகக் கணையால் விழுந்து இறந்தவர்களுக்கு) அருமையான உயிரைத் தந்துதவி; யாதும் காரியம் இல்லாமல் போனான் - (நம்மிடத்தில் எந்தக் காரியத்தையும் (கைம்மாறாகப்) பெறாமல் போனான்; கருணையோர் கடமை ஈதால் - அருளுடையவர்களுடைய செய்கை இதுதான் (போலும்); பேர் இயலாளர் - பெருந்தன்மையுடையவர்கள்; செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் - செய்யும் செயலுக்குப் பயன் பெறுவோம் என்று எண்ண மாட்டார்கள்; (இஃது எவ்வாறு எனின்) வையம் - இவ்வுலகில் வாழ்பவர்கள்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ - மழை (தங்களுக்கு) உதவுதலை நோக்கி அதற்குக் கைம்மாறு செய்ய வல்லமை உடையவர்கள் ஆள்வார்களோ? என்றான் - என்று கூறினான்.

கைம்மாறு கருதாது நாகக் கணையால் விழுந்து கிடந்தவர்களை உயிர்ப்பித்துக் காரியம் இல்லான் போன கருடனது செயல், உலகத்தவர் எவ்விதக் கைம்மாறு செய்யாத இடத்தும் அவர்களுக்குப் பெய்து உதவும் மழையின் செயல் போன்றது என்றார்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு

ஒப்புரவறிதல்-1 என்ற திருக்குறளின் கருத்து முழுவதும் இப்பாடலில் அமைந்துள்ளமை நோக்குக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble one looked after him and said, He gave us precious life, and, wanting
  2. nothing in return, he has gone; this is the duty of the compassionate;
  3. the great of nature never say, We will grasp a reward for our deed;
  4. does the world look to the rain and make it some return?

What the poem says

Irāmaṉ reflects on Karuṭaṉ's departure. He restored their lives and went away wanting nothing; such is the way of the kind-hearted, who never expect a reward for their good deeds.

He compares Karuṭaṉ to the rain, which the world can never repay. The commentary points out that the verse carries the whole sense of a couplet from the Tirukkuṟaḷ (chapter on beneficence, verse 1). That couplet asks what the world can give back to the rain-cloud, whose duty seeks no return.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āriyaṉ avaṉai nōkki, ‘ār uyir utavi, yātum
kāriyam illāṉ pōṉāṉ; karuṇaiyōr kaṭamai ītāl;
pēr iyalāḷar, “ceykai ūtiyam piṭittum “ eṉṉār;
māriyai nōkkik kaimmāṟu iyaṟṟumō, vaiyam? ‘eṉṟāṉ.