கம்பராமாயணம் 8317 · யுத்த 18.270
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் - பறவைக் கூட்டங்களைப் பாதுகாக்கின்ற தூயவனாகிய கருடன்; மாயப் பிறவியின் பகைஞ - (இராமனைப் பார்த்து) மாயப்பிறப்பறுக்கும் பிறவியின் பகைவனே; நின்னோடு பழைய உறவு உள தன்மை எல்லாம் - உன்னோடு (எனக்குப்) பழைய உறவு உள்ள தன்மைகளை எல்லாம்; அரக்கனோடு - அரக்கனாகிய இராவணனோடு; அம்மறவினை முடித்த பின்னர் வருவென் உணர்த்துவென் - அந்தப் போர்த்தொழிலை (நீ முடித்த பின்பு வந்து உணர்த்துவேன்; என்று உணர்த்தி - என்று கூறி; நல்கு விடை - இப்போது நீ எனக்கு விடை கொடு; எனப் பெயர்ந்து போனான் - என்று திரும்பிப் போனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The pure one who guards the races of birds said, All the nature of the old
- kinship that I have with you I will make known to you; when you have finished
- this warlike work with the rākṣasa, I will come; so he told him, and saying, O foe
- of illusory birth, give me leave, he turned and went away.
What the poem says
Karuṭaṉ, protector of all birds, does not reveal who he is. He calls Irāmaṉ the enemy of deluding rebirth and promises to return after the war with Irāvaṇaṉ is over, to explain the ancient bond between them, for he is the mount of Tirumāl.
Then he asks Irāmaṉ's leave and flies away.