கம்பராமாயணம் 8468 · யுத்த 20.19

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி,
அரிந்தனன் அகற்றி, மற்று அ(வ்) ஆண்தகை அலங்கல் ஆகத்து,
எரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ,
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற்று நின்றது அன்றே.

பொருள் · Meaning in Tamil

சொரிந்தன பகழி எல்லாம் - (இராமன்) தன்மேல் மகரக் கண்ணனால் ஏவப்பெற்ற எல்லா அம்புகளையும்; கூர்க் கடுங்கணைகள் தூவி அரிந்தனன் அகற்றி - வெம்மையும், ஒளியும் பொருந்திய அம்புகளை ஏவி ஒடித்துத் தள்ளி; மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து - ஆனபின்பு ஆண்மைக் குணமுள்ள அந்த மகரக்கண்ணனுடைய மாலையை அணிந்த மார்பிலே; தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன் - ஒரு கணை பாயும் படியாக இராமன் ஆராய்ந்து எடுத்து ஓர் அம்பினை எய்தான்; ஏவ - (அப்படி அவன்) செலுத்த; நெரிந்துஎழு புருவத்தான் தன் நிறத்து உற்று நின்றது அன்றே - (அவ்வம்பானது, கோபத்தால்) வளைந்து எழுந்த புருவத்தை உடைய மகரக்கண்ணனது மார்பிலே அழுந்தி நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the arrows rained on him he cut down and cast aside, scattering bright, fierce shafts;
  2. then, so that one arrow would pierce the garlanded chest of that manly foe,
  3. Irāmaṉ chose one and shot it; and as he let it fly,
  4. it sank into the chest of the one whose brows were knotted and raised, and stayed there.

What the poem says

Irāmaṉ answers the storm calmly. With his own blazing arrows he cuts down every shaft aimed at him.

Then he picks out a single arrow with care and sends it into Makarakkaṇṇaṉ's garlanded chest, where it lodges deep. His opponent's brows are drawn together in fury.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1corintaṉa pakaḻi ellām cuṭark kaṭuṅ kaṇaikaḷ tūvi,
arintaṉaṉ akaṟṟi, maṟṟai āṇtakai alaṅkal ākattu,
terintu oru pakaḻi pāya eytaṉaṉ, irāmaṉ; ēva,
nerintu eḻu puruvattāṉtaṉ niṟattu uṟṟu niṉṟatu aṉṟē.