கம்பராமாயணம் 8469 · யுத்த 20.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏவுண்டு துளக்கம் எய்தா - (இராமனால் எய்யப்பட்ட) அம்பு தைத்து நடுங்க; இரத்தகப் பரிதி ஈன்ற பூவுண்ட கண்ணன் - செந்நிறத்தை உடைய சூரியனால் மலர்விக்கப் பெற்ற செந்தாமரைப் பூப்போன்ற கண்களை உடைய மகரக்கண்ணன்; வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் - வாயில் முன்னமே உண்ட புகையைக் கக்குபவன் போன்றவனாகி (நெருப்பை உமிழ்ந்துகொண்டு) தேவுண்ட கீர்த்தி அண்ணல் திருஉண்ட கவசம் சேர - தெய்வத்தன்மை பொருந்திய புகழை உடைய இராமனது அழகிய கவசத்தில் தைக்கும் படியாக; தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் - (பகைவரது) தசையில் தோய்ந்த திண்ணிய ஆயிரம் அம்புகளைப் பொழிந்து ஆரவாரித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Struck by the arrow yet not shaken, he whose eyes were like flowers
- opened by the red sun, looking like one who spits out smoke he has swallowed,
- so that they would reach the beautiful armour of the lord whose fame the gods enjoy,
- showered a thousand hard diamond arrows steeped in flesh, and roared.
What the poem says
Wounded, Makarakkaṇṇaṉ keeps his feet. His eyes are red as lotuses opened by the dawn sun, and he looks as though he is breathing out smoke and fire.
He looses a thousand tough arrows, already stained with the flesh of earlier victims, against Irāmaṉ's armour, and roars.