கம்பராமாயணம் 8470 · யுத்த 20.21

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்; ஆழி
மன்னனும், முறுவல் எய்தி, வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி,
பொன் நெடுந் தடந்தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி,
வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்து வீழ்த்தான்.

பொருள் · Meaning in Tamil

அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் - (மகரக்கண்ணன்) அவ்விதம் அம்பு எய்ததைக் கண்ட தேவர்கள் (இப்படியும் எய்ய முடியுமோ என) வியப்படைந்தனர்; ஆழி மன்னனும் முறுவல் எய்தி - ஆணைச் சக்கரத்தை உடைய இராமனும் புன்முறுவல் பூத்து; வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி - கூர்மையான ஆறு அம்புகளை எடுத்து; பொன்நெடுந் தடந்தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி - (அவ்வம்புகளால்) அழகிய நெடிய பெரிய தேரில் பூட்டப்பெற்ற குதிரைகளின் குளம்புகளைத் துண்டித்து; வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் - மகரக்கண்ணன் பிடித்திருந்த வில்லை நடுவிடத்தே ஒடித்து தேர்ப்பாகனது தலையையும் பூமியில் விழும்படியாகச் செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods who saw it were amazed; and the king of the discus,
  2. breaking into a smile, took up six sharp arrows,
  3. cut away the hooves of the horses yoked to the great tall golden chariot,
  4. split the bow in the middle, and sent the charioteer's head to the ground.

What the poem says

The gods watching from the sky are astonished that anyone can shoot like this. Irāmaṉ, 'king of the discus' (the wheel of royal command, and also Viṣṇu's weapon), only smiles.

With six sharp arrows he cuts off the hooves of the chariot's horses, breaks Makarakkaṇṇaṉ's bow in two, and strikes off the charioteer's head.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu kaṇṭa vāṉōr aticayam uṟṟār; āḻi
maṉṉaṉum, muṟuval eyti, vāy ampu ōr āṟu vāṅki,
poṉ neṭun taṭan tēr pūṇṭa puraviyiṉ kuraṅkaḷ pōkki,
vil naṭu aṟuttu, pākaṉ talaiyaiyum nilattil vīḻttāṉ.