கம்பராமாயணம் 8471 · யுத்த 20.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும் சோரியன் - மார்பினிடத்து (இராமனால் எய்யப்பெற்று) தைத்து நின்ற அம்பின் வாயிடத்தினின்றும் வெயிலைப் போலச் செந்நிறமுடையதாக ஒழுகும் இரத்தத்தை உடையவனாகிய மகரக்கண்ணன்; விசும்பினூடு ஓர் இமைப்பிடைத் தோன்றா நின்றான் - ஓர் இமைப்பொழுதிற்குள் ஆகாயத்தினிடத்துத் தோன்றி நின்று; தவத்தின் பெற்றான் - தவத்தினால் சித்தி பெற்றவனாதலின்; கார் உரும் ஏறும், காற்றும், கனலியும் - மேகத்தில் பொருந்திய பேரிடியும், காற்றும் நெருப்பும் என்ற இவற்றை; கடைநாள் வையம் பேர்வுறு காலம் என்னப் பெருக்கினன் - உலகம் நிலை பெயர்ந்து அழியும் படியான ஊழிக்காலம் எனும்படி மிகுதியாக உண்டாக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With blood streaming like sunlight from the wound where the arrow stood in his chest,
- he appeared in the sky in the blink of an eye;
- and the thunderbolts of the dark cloud, the winds and fire
- he multiplied, as at the final day when the world is overturned, for he had gained them by penance.
What the poem says
Bleeding from the arrow still in his chest, the blood bright red as sunlight, Makarakkaṇṇaṉ suddenly rises into the sky.
Through powers won by long penance he conjures up thunderbolts, gales and fire in such quantities that it seems like the end of the world, when the universe is torn from its foundations.