கம்பராமாயணம் 8519 · யுத்த 21.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அங்கதர் அனந்தகோடி உளர் எனும் - (இலக்குவனைச் சுமந்து திரியும்) அங்கதராயினார் (ஒருவரன்றிப்) பல கோடி அளவினராக உள்ளார்” என்பான்; இங்கு அனுமன் என்பாற்கு - இங்கு (இராமனைச் சுமந்து திரியும்) அனுமன் என்பவனுக்கு; இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் - எல்லா உலகங்களிலும் இடம் இல்லையாய் விடுமோ என்பான்; சிங்க ஏறு அனைய வீரர் - ஆண் சிங்கத்தினை ஒத்த வீரர்களாகிய இராம இலக்குவரது; கடுமையைத் தெரிகிலாதான் - போரின் விரைவினை அறிந்து கொள்ள இயலாதவனாகிய இந்திரசித்து; எங்கும் இம்மனிதர் என்பார் இருவரே கொல் என்று உன்னும் - இம்மனிதர் இருவரே எல்லா இடங்களிலும் நிரம்பி விட்டார்களோ? என இவ்வாறு எண்ணுவானாயினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There are endless crores of Aṅkataṉs,' he says; 'for those called Aṉumaṉ
- it seems there is no longer room enough in all the worlds,' he says;
- 'Are these two called men everywhere at once?' he wonders,
- unable to grasp the fierceness of the heroes like lion kings.
What the poem says
The brothers move so fast on their monkey mounts that Intiracittu cannot follow them. Aṅkataṉ seems to be in countless places at once, and there seem to be so many Aṉumaṉs that the worlds cannot hold them all.
He begins to wonder whether these two 'men' have filled every place at the same moment. He cannot make out the speed of the two lion-like heroes.