கம்பராமாயணம் 8518 · யுத்த 21.31

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வயிறு அலைத்து ஓடிவந்து - அரக்க மகளிர் (தத்தம் கணவர் இறந்த செய்தி கேட்டு) வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடிவந்து; கொழுநர் மேல் மகளிர் மாழ்கி - (தத்தம்) கணவர் மேல் விழுந்து மனங்கலங்கி; குயில் தலத்து உக்க என்னக் - குயில்கள் நிலத்தில் வீழ்ந்து அரற்றின என்னும்படி; குழைகின்ற குழைவை நோக்கும் - மனம் நைந்து இரங்குகின்ற இரங்குதலை நோக்குவான்; எயிறு அலைத்து இடிக்கும் பேழ்வாய்த்தலை இலா யாக்கை ஈட்டம் - பற்களைக் கடித்து இடிபோற் பேரொலி செய்யும் பிளந்த வாயினை உடையதலைகள் உயிருள்ள காலத்து உடையனவாய் இப்பொழுது இலாத உடல்களின் தொகுதிகள்; பயிறலை - (போர்க்களம் எங்கும்) பொருந்தி ஆடுவதனையும்; பறவை பாரில் படிகிலாப் பரப்பை, பார்க்கும் - (அவற்றை நெருங்குதற்கு அஞ்சிப் பறவைகள் பூமியிற் படிந்து நிணங்கவர்தற்கு இயலாத (போர்க்களப்) பரப்பினையும் (ஒருங்கு) நோக்குவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He looks at the grief of the women who come running, beating their bellies,
  2. swooning over their husbands, wilting like cuckoos fallen to the ground;
  3. he looks at the expanse where crowds of headless bodies, once with gaping mouths that gnashed their teeth and thundered,
  4. move about, so that birds cannot settle on the earth.

What the poem says

The demon women of Ilaṅkai have run out to the battlefield, beating their stomachs in grief and collapsing over their husbands' bodies, limp as cuckoos fallen from the sky.

Headless trunks of warriors who once roared and gnashed their teeth still lurch about the field. In battle poetry such trunks were imagined to rise and dance after a great slaughter. The field is so crowded with them that even the carrion birds cannot find room to land.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vayiṟu alaittu ōṭi vantu koḻunarmēl makaḷir māḻki,
kuyil talattu ukka eṉṉak kuḻaikiṉṟa kuḻaivai nōkkum;
eyiṟu alaittu iṭikkum pēḻ vāyt talaiilā yākkai īṭṭam
payiṟalai, paṟavai pāril paṭikilāp parappaip pārkkum.