கம்பராமாயணம் 856 · பால 13.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(ப. றை குசை உறு பரியும் - கடிவாளம் பூண்ட குதிரையும்; தேரும் வீரரும் - தேரும் வீரர்களும்; எங்கும் குழுமி - எல்லா இடத்திலும் கூடி; விசையொடு கடுக - வேகமாக விரைந்து செல்ல; பொங்கி வீங்கிய - (அதனால்) மிகுதியாக மேல் எழுந்த; தூளி - புழுதியானது; விம்மி - பெருகி, மேகம் பசையுறு - மேகத்தின் ஈரம் பொருந்திய; துளியின் தாரை - நீர்த்துளியின் தாரைகள்; பசுந் தொளை - (வெளிப்படுவதற்கு உரிய) பசிய தொளைகளை; அடைத்த - தூர்த்தன; திசைதொறும் நின்ற - (அல்லாமலும்) (எட்டுத் திக்குகளில்) காவலாகி நிற்கின்ற; யானை - திசை யானைகளின்; மதம் தொளை - மதநீர் ஒழுகுகின்ற தொளைகளிலும் சென்று; செம்மிற்று - தூர்த்து விட்டன.
குதிரை, தேர், வீரர் எல்லாம் கூடி விரைந்து செல்வதால் புழுதி மிகுதியாக எழுந்து வானத்திலும், எட்டுத் திக்குகளிலும் பரவிற்று என்பது. இத்தூளி மேகத்தின் துளியின் தாரைப் பசுந்துளையையும், திசை யானைகளின் மதத்துளையையும் தூர்த்தன - உயர்வு நவிற்சியணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As bridled horses, chariots and warriors massed everywhere
- and rushed on at speed, the dust surged up and swelled,
- and choked the clouds' fresh openings through which their moist rain pours in streams;
- and it stopped up the must-ducts of the elephants that stand at every quarter.
What the poem says
The dust thrown up by the speeding horses, chariots and soldiers rises so high and spreads so far that it clogs the very pores of the clouds through which rain falls.
It even reaches the eight elephants that hold up the corners of the world and blocks the glands from which their must flows, a deliberate exaggeration to suggest the scale of the march.