கம்பராமாயணம் 858 · பால 13.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செய்களில் - வயல்களிலும்; மடுவில் - மடுவிலும்; நல் நீர்ச் சிறைகளில் - நல்ல நீருள்ள குளங்களிலும்; நிறையப் பூத்த - நிறைய மலர்ந்துள்ள; நெய்தலும் - நெய்தற் பூவும்; குமுதப் பூவும் - குமுத மலரும்; நெகிழ்ந்த செங்கமலப் போதும் - மலர்ந்த செந்தாமரைப் பூவும் ஆகிய இவை (தம்முடைய); கைகளும் - கைகளையும்; முகமும் - முகத்தையும்; வாயும் - வாயையும்; கண்களும் - கண்களையும்; காட்ட - காட்ட; கண்டு - (அவற்றை) பார்த்து; இவை - இந்த நெய்தல் முதலியவற்றை; கொய்து தருதிர் - பறித்துத் தாருங்கள்; என்று - என்று; கொழுநரை - (தம்) கணவரை; தொழுகின்றார் - வணங்கிக் கேட்டார்கள்.
நெய்தல் பூக்கள் கண்களுக்கும், குமுதம் வாய்க்கும், கமலம் கை, முகம் என்பவற்றுக்கும் உவமையாகும். எதிர் நிரல் நிரையணி. நெய்தல் முதலியன தம் உறுப்புகளை ஒத்தலின் அவற்றைப் பறித்துத் தாருங்கள் என்று அவற்றின் வீறு கெடுக்கும் நோக்கில் வேண்டினர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the fields, in the pools, in tanks of good water, the flowers that bloomed in plenty,
- blue lilies, white water-lilies and opening red lotus buds,
- seemed to mimic their hands, faces, lips and eyes; and seeing this,
- the women begged their husbands with joined palms, 'Pluck them and give them to us.'
What the poem says
As the march passes through wetlands, the women notice flowers that look like parts of their own bodies: blue lilies like their eyes, white water-lilies like their lips, red lotuses like their hands and faces.
Piqued at the rivalry, they beg their husbands to pick the flowers for them, so as to put an end to the competition. The verse lists the flowers and the body parts in reverse order, a recognised figure.