கம்பராமாயணம் 859 · பால 13.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பந்திஅம் புரவி நின்றும் - வரிசையாகச் செல்லும் அழகிய குதிரைகளிலிருந்து; பாரிடை இழிந்தோர் - நிலத்தில் இறங்கின மகளிர்; வேழம் சார - யானை அருகே; வந்தது என்ன - வந்தது என்று; வாசக் குந்தளம் - மணம் கமழும் கூந்தல்; பாரம் சோர - சுமை அவிழ்ந்து தொங்கவும்; குல மணிக் கலன்கள் - இரத்தினங்கள் பதித்த அணிகலன்கள்; சிந்த - கீழே சிதறவும்; சந்தம் நுண்துகிலும் - அழகிய நுண்ணிய ஆடையும்; வீழ - கீழே விழ; தளிர்க் கையால் - (ஆடையை) தளிர் போன்ற கையால்; அணைத்து - (ஆடை விழாமல்) பற்றிக் கொண்டு; மயில் என - மயிலைப் போல; இரியல் போவார் - நிலை தடுமாறி ஓடினார்கள்.
பந்தி: குதிரைலாயம் - தன்மை நவிற்சியணி. குதிரையிலிருந்து இறங்கிய மகளிர் அருகே யானை வரக்கண்டு அஞ்சித் தமது கூந்தல் விரிந்ததையும், அணிகள் சிதறுவதையும் பொருட்படுத்தாமல் அரையாடை அவிழ்ந்ததனால் மானத்திற்கு இழுக்கு நேருமே என்ற கருத்தில் அதனை மட்டும் அவிழாவாறு கைகளால் தழுவிப் பிடித்துக் கொண்டு மயில்போல நிலைகெட்டு ஓடலாயினர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Women who had got down to the ground from the fine horses in their lines,
- their heavy, fragrant tresses slipping loose, their noble jewelled ornaments scattering,
- their lovely fine garments falling, which they clutched with tender hands,
- cried 'An elephant is coming close!' and fled in disarray like peacocks.
What the poem says
Some women have dismounted from their horses when someone shouts that an elephant is coming. They scatter in panic like startled peacocks.
Their hair comes down and their jewels fly off, but they ignore all that; the only thing they hold on to is their slipping clothes, to save their modesty.