கம்பராமாயணம் 860 · பால 13.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குடையொடு - குடைகளும், பிச்சம் - பீலிக்குஞ்சக் குடைகளும்; தொங்கல் குழாங்களும் - மாலைக் கூட்டங்களும்; கொடியின் காடும் - கொடிகளின் தொகுதிகளும்; இடை இடை மயங்கி - தம்முள் கலந்து; எங்கும் வெளிக் கரந்து - எல்லா இடத்திலும் வெற்றிடம் இல்லாதவாறு மறைத்து; இருளைச் செய்ய - இருளை உண்டாக்க; படைகளும் - (வில்முதலான) படைக்கருவிகளும்; முடியும் பூணும் - பொன் மகுடமும் அணிகளும்; படர்வெயில் - பரவிய ஒளியை; பரப்பிச் செல்ல - பரப்பிக் கொண்டு போக; இடை - (அச்சேனை செல்லும்) இடத்தில்; ஒரு கணத்தினுள் - ஒரே கணப்பொழுதிலே; இரவு உண்டு - இரவும் உள்ளது; பகலும் உண்டு - பகலும் உண்டு.
குடைகள் வெயிலை மறைக்கின்றன; யானையின் மேனி கருமையாக உள்ளது; மாலை, கொடி முதலியன விண்ணை மறைத்து நிற்கின்றன. ஆகவே, இவற்றால் எங்கும் இருள் பரவியுள்ளது. ஆனால், படைக்கலம் முதலியன வெயிலை உண்டாக்குகின்றன. அதனால், கண நேரத்தில் இரவும் பகலும் ஒருசேர உள்ளன என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Parasols and peacock-feather shades, clusters of hanging garlands and forests of banners,
- mingling everywhere, hid the open sky on every side and made a darkness,
- while weapons, crowns and jewels went along spreading a broad sunlight;
- so there, within a single moment, there was night and there was day!
What the poem says
The army's parasols, feather shades, garlands and banners are so thick that they blot out the sky and create a kind of night over the march.
At the same time the polished weapons, crowns and jewels flash like sunlight. So in the midst of the army, night and day exist together at the same instant.