கம்பராமாயணம் 861 · பால 13.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முருக்கு இதழ் - கல்யாண முருங்கைப் பூவைப் போன்ற உதட்டையும்; முத்தம் மூரல் - முத்துப் போன்ற பற்களையும்; முறுவலார் - புன்சிரிப்பையும் உடைய மகளிர்; முகங்கள் என்னும் - (தம்முடைய) முகங்கள் என்கின்ற; திருக் கிளர் கமலப் போதில் - அழகுமிக்க தாமரைப் பூவில்; தீட்டின கிடந்த - தீட்டியனவாய்க் கிடந்த; கூர்வாள் - கூரிய வாட் படைகள் (கண்கள்); நெருக்கு - நாம் நெருங்கியுள்ளதை, இடை அறுக்கும் - ஊடுருவிச் சென்று நீக்கும்; நீங்கள் - (ஆதலால், ஆடவரே) நீங்கள்; நீங்குமின் நீங்கும் - விலகுங்கள் விலகுங்கள்; என்று என்று - என்று தெரிவித்தபடி; அருக்கனில் ஒளிரும் மேனி - கதிரவனைப் போல் விளங்கும் உடம்பைப் படைத்த; ஆடவர் - ஆண்கள்; அகலப் போவார் - வழிவிட்டுச் செல்வார்
நெருங்கிச் செல்லும் ஆடவர் மகளிர் கூட்டத்தைக் கண்டு நாம் நெருக்கிச் சென்றால் தீட்டிக் கிடக்கின்ற வாள்கள் அறுத்துவிடும். விலகுங்கள், விலகுங்கள் என்று சொல்லிக் கொண்டே விலகினர் என்பது.
நீங்குமின் நீங்கும் - அடுக்கு, விரைவுப் பொருளது - மின், உம் என்ற இரண்டும் ஏவல் பன்மை விகுதிகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In the faces of women with lips like murukku petals and pearly smiles,
- those splendid lotus blossoms, lie sharp swords ready whetted,
- that will cut through our crowding; move aside, move aside!' saying it again and again,
- the men whose bodies shone like the sun drew away as they went.
What the poem says
As the men press forward into a crowd of women, they warn one another to make way. In the lotus faces of the women, they say, lie freshly sharpened swords, their eyes, which will slice through anyone who pushes too close.
So the sun-bright young men call "move aside, move aside!" and step back to let the women pass.