கம்பராமாயணம் 86 · பால 3.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்' என்னும் - (இம்மையில்) புண்ணியம் செய்தவர்கள் (மறுமையில்) சுவர்க்கம் அடைவார்கள் என்னும்; ஈது அருமறைப் பொருளே - இது, வேதங்கள் கூறும் கருத்தாகும்; இராகவன் அன்றி - இராம பிரானை அல்லாது; வேறு எவர் - வேறு யார்: மண்ணிடை மாதவம் அறத்தொடு வளர்த்தார் - இந்த உலகத்திலே சிறந்த தவத்தை அறத்துடனே வளர்த்தவர்கள் இருக்கிறார்களா?; எண் அருங் குணத்தின் அவன் - நினைப்பதற்கரிய நற்குணங்களை உடைய அந்த இராமபிரான்; இருந்து இவ் ஏழ்உலகு ஆள் இடம் என்றால் - இருந்து இந்த ஏழுலகத்தினையும் ஆளும் இடம் (அயோத்தி) என்றால்; இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் - இதைவிடவும் மேலான 'இன்பம்' உள்ள இடம்; உண்டு என உரைத்தல் ஒண்ணுமோ - உண்டு எனக் கூறஇயலுமோ?
திருமால், பரமபதமாகிய மேலான இடத்தை விட்டு இங்கு வந்து அரசு செய்த இடம் என்றால் இதனினும் போகம் நுகருமிடம் வேறு ஒன்று உண்டென உணர்த்தல் இயலுமோ என்பதும் ஒரு பொருளாகும்.
மதங்கரது தவப்பள்ளியின் மாண்பினைச் சுட்டும்போதும் 'புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது' (3699) என்று கம்பர் குறிப்பிடுவது இணைத்து உணரத்தக்கது.
துறக்கம் - சுவர்க்க லோகம்; எண்ண அருங்குணம் - அளவிட இயலாத கல்யாண குணங்கள்; போகம் - இன்ப நுகர்ச்சி; ஒண்ணுமோ - ஓகாரம் எதிர்மறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Those who do good deeds enter heaven': this is the meaning of the sacred Vedas;
- and on earth, who but Irākavaṉ has made great penance grow together with dharma?
- If this is the place where he, of virtues past counting, lived in joy and ruled these seven worlds,
- could anyone say there is another place of bliss besides this?
What the poem says
The Vedas teach that those who do good deeds go to heaven. But no one on earth has practised austerity and righteousness as Irāmaṉ (here called Irākavaṉ, "the descendant of Raghu") has. Ayōttī is where he lived happily and ruled the seven worlds. So how could any heaven be a greater place of joy than Ayōttī?
The verse can also be read another way: Vishnu left his own highest heaven to come and rule here, so there can be no better place of happiness than this.