கம்பராமாயணம் 87 · பால 3.6

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தங்கு பேரருள் உம் தருமமும் துணையாத் தம்பகைப் புலன் களைந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செம் கண் மால், பிறந்து ஆண்டு அளப்பரும் காலம் திருவின் வீற்று இருந்தனன் என்றால் ,
அங்கண்மா ஞாலத்து, அ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?

பொருள் · Meaning in Tamil

தங்கு பேரருளும் தருமமும் துணையா - தம்மிடம் தங்கிய மிகுந்த கருணையும் அறமுமே துணையாகக் கொண்டு; தம்பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும் - தமக்குப் பகையாகிய புலன்களைக் கட்டுப்படுத்துபவராகி; பொங்குமா தவமும் ஞானமும் புணர்ந்தோர் - மேன்மேலும் வளர்கின்ற தவத்தையும் மெய்யறிவையும் பெற்றிருக்கும் மேலோர்கள்; யாவர்க்கும் புகலிடம் ஆன - யாவருக்கும் அடைக்கலமாக அடையத்தக்க; செங்கண்மால் பிறந்து - அழகிய கண்களை உடைய திருமால் அவதரித்து; ஆண்டு அளப்ப அருங்காலம் - அங்கு (அயோத்தி நகரில்) அளவிட இயலாத பல காலம், திருவின் வீற்றிருந்தனன் என்றால் - இலக்குமி தேவியின் (அவதாரமான) சீதா பிராட்டியுடன் சிறப்போடு தங்கி இருந்தான் என்றால்; அங்கண்மா ஞாலத்து - அழகிய விசாலமான இவ்வுலகிலே; இந்நகர் ஒக்கும் பொன்நகர் - இந்த அயோத்திக்கு நிகரான அழகிய நகரம்; அமரர் நாட்டு யாதோ? - தேவ உலகில்தான் எது இருக்கிறது? இல்லை என்றபடி.

"தம் புலன்களை அடக்கி அருளும் அறமும் துணையாகச் சிறந்த தவத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் பெற்றிருக்கும் மேலோர்கள் புகலடை தற்குரிய இட மான திருமாலே இராமனாக அவதரித்து, அளவிலாக் காலம் அரசு புரிந்த இந்த அயோத்தி நகருக்கு நிகரான நகரம் தேவ உலகிலும் இல்லை" என்பது கருத்து. முந்தியப் பாடலில் கூறிய கருத்தினையே இப்பாடலில் வேறு விதமாகக் கூறினார். 'அளப்பருங்காலம்' என்றது பதினோராயிரம் ஆண்டுகள் என்பர். புலன்கள் மெய்யறிவுக்குப் பகை யாதலின் 'பகைப்புலன்' என்றார் அருளும் தருமமும் தவமும் ஞானமும் ஆகிய இவையே இறைவனை அடைதற்குரியன என்பதால் 'அருளும்........ ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who, with abiding grace and dharma as their aids, quench the five senses that are their foes,
  2. and who have joined surging penance with wisdom: of all these the refuge,
  3. the red-eyed Māl, was born here and dwelt there with Tiru in splendour for time beyond measure; if so,
  4. in this wide and lovely world, or in the land of the gods, what golden city is equal to this one?

What the poem says

The poet returns to the same idea in another form. Vishnu, the red-eyed Lord, is the refuge sought by sages who subdue their senses and pursue compassion, righteousness, austerity and wisdom. He was born in Ayōttī as Irāmaṉ and reigned there in glory for an immeasurable time with Cītai, who is Lakṣmī incarnate. Tradition puts his reign at eleven thousand years. How then could any city on earth or in the world of the gods equal it? The senses are called "foes" because they stand in the way of true knowledge.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṅku pēr aruḷum tarumamum tuṇaiyāt tam pakaip pulaṉkaḷ aintu avikkum
poṅku mā tavamum ñāṉamum puṇarntōr yāvarkkum pukaliṭam āṉa
ceṅ kaṇ māl, piṟantu āṇṭu aḷappa aruṅkālam tiruviṉ vīṟṟiruntaṉaṉ eṉṟāl,
am kaṇ mā ñālattu, in nakar okkum poṉ nakar amarar nāṭṭu yātō?