கம்பராமாயணம் 8626 · யுத்த 21.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீட்டும் அக்கையால் வீசி செவித்தலத்து எற்ற வீழ்ந்தான் - திரும்பவும் (அனுமன்) அவ்விடது கரத்தினாலே ஓங்கி (அகம்பனது) கன்னத்திலே அறைந்து தாக்க வீழ்ந்தவனாய்; உயிரை விண்ணோர் குழாத்திடை கூட்டினான் - தனது உயிரைத் தேவர் குழாத்திடைச் செலுத்தி இறந்துபட்டான்; ஈட்டம் உற்று எதிர்ந்த அரக்கர் கூட்டம் எல்லாம் - (அவ்வளவில் போர்க்களத்தில் திரண்டு நின்று, எதிர்ந்த அரக்கர் கூட்டம் அனைத்தும்; கோள் அரி கண்ட காட்டில் வாழ் விலங்கு மாக்கள் என்ன - சிங்கத்தைக் கண்ட காட்டில் வாழுகின்ற விலங்குகளைப் போன்று; திசைகள் எங்கும் இரிந்தன - எல்லாத் திக்குகளிலும் நிலைகுலைந்து சென்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Swinging that hand once more, he struck him on the ear; he fell,
- and sent his life to join the company of the gods; the rākṣasa throng,
- like the beasts that live in the forest when they see a killing lion —
- all who had massed and faced him fled in every direction.
What the poem says
A second left-handed blow to the side of the head kills Akampaṉ. His life goes to join the gods, since a warrior who dies in battle reaches heaven.
When their champion falls, the rākṣasas who had gathered to fight scatter in every direction, like forest animals running from a lion.