கம்பராமாயணம் 8625 · யுத்த 21.138

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அடித்தவன் தன்னை நோக்கி - அனுமன் (தன்னை) அடித்தவனாகிய அகம்பனை நோக்கி; வெறுங்கையான் பிழையிற்று என்னா - இவன் (ஆயுதம் எடாத) வெறுங்கையினை உடையான் (இவனை ஆயுதத்தால் தாக்குதல்) குற்றமுடைய செயலாம் என எண்ணி; அசனி ஏறு அனைய தண்டு பிடித்து நின்றேயும் எற்றான் - இடியேற்றினைப் போன்ற தண்டாயுதத்தைத்தான் பிடித்திருந்தும் (அதனைக் கொண்டு) தாக்காதவனாய்; வாய் மடித்து இடத்தகையால் மார்பிடைக் குத்த - வாயினை மடித்துக்கொண்டு தனது இடக்கையினால் அவ்வகம்பனுடைய மார்பின் கண்ணே குத்த; குருதி வெள்ளம் வாயால் குடித்து நின்று - (அவ்வரக்கன்) உதிரப் பெருக்கினை (முன்னம்) வாயினால் பருகி நின்று; உமிழ்வான் என்னக் கக்கினான் - (இப்போது) உமிழுகின்றவனைப்போலக் கக்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at the one who had struck him, though he held a club like a thunderbolt
  2. he did not strike with it — "He is empty-handed; it would be wrong," he thought —
  3. and biting his lip he punched him in the chest with his left hand; and he,
  4. as though he had drunk it and stood spewing it out, vomited a flood of blood.

What the poem says

Aṉumaṉ follows the warrior's code. Akampaṉ has no weapon left, so Aṉumaṉ will not hit him with his club, because attacking an unarmed man would be wrong.

Instead he bites his lip and punches Akampaṉ in the chest with his left hand, matching the left-handed blow he received. Akampaṉ pours out blood from his mouth as if he had drunk it and was spitting it up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭittavaṉ taṉṉai nōkki, acaṉiēṟu aṉaiya taṇṭu
piṭittu niṉṟēyum eṟṟāṉ, 'veṟuṅ kaiyāṉ, piḻaiyiṟṟu 'eṉṉā,
maṭittu vāy, iṭatta kaiyāl mārpiṭaik kutta, vāyāl
kuṭittu niṉṟu umiḻvāṉ eṉṉak kakkiṉaṉ, kuruti veḷḷam.