கம்பராமாயணம் 8628 · யுத்த 21.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
போர்க்குன்றம் அனைய தோளான் - பொருதல் தொழிலை உடையதும் மலையினை ஒத்ததுமாகிய தோள்களை உடைய அனுமன்; ஆர்க்கின்ற குரலும் கேளான் - (மீண்டு வந்த வானர வீரர்) ஆரவாரிக்கின்ற குரலைக் கேட்டிலன்; அசனி ஏற்றைப் பேர்க்கின்ற - பேரிடியின் ஒலியையும் அடக்கவல்ல; இலக்குவன் சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் - இலக்குவனது வில் நாணின் பேரொலியையும் கேட்டிலன்; வீரர் யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் - (தன்) சேனையைச் சேர்ந்த வீரர்களில் இன்னார்க்கு இன்ன துன்பம் நேர்ந்தது என்பதனையும் அறிந்திலன்; இசைப்போர் இல்லை - அவற்றை அறிந்து கூறுவோரும் இல்லை; இனையது ஓர் பொருமல் உற்றான் - (இந்நிலையில்) இத்தகையது என ஒப்புமை கூறவியலாத ஓர் பெருந்துயரத்தை அடைந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He did not hear the roaring voices; he did not hear the great twang
- of the bowstring of Ilakkuvaṉ's bow, that could drown the thunderbolt; which of the heroes
- had come to harm he did not know; there was no one to tell him;
- and he, whose shoulders were like hills of war, fell into distress such as this.
What the poem says
After killing Akampaṉ, Aṉumaṉ finds himself cut off. He can no longer hear the shouts of the monkey army or the twang of Ilakkuvaṉ's bowstring, which is louder than thunder.
He has no idea which of his comrades may be hurt and there is no one to ask. For all his strength he is overcome with worry.